4 பேர் தீக்குளித்து மரணம் – கார்ட்டூனிஸ்ட் கைது
சென்னை : கந்துவட்டிக் கொடுமையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறித்து முதல்வரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார். சமூக பிரச்னைகள் குறித்து சாடும் வகையில் கேலிச் சித்திரங்களாகவும் கருத்தாழமிக்க சித்திரங்களாகவும் படைத்து வருபவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. குமுதம் இதழில் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் தற்போது லைன்ஸ் மீடியா என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் கார்ட்டூன்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார். கடந்த அக்டோபர் 24ம்

