கன மழை காரணமாக ,புதுக்குடியிருப்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!

5493 21

அண்மைய நாட்களாக தொடந்துவரும் மழை  காரணமாகபுதுக்குடியிருப்பு நகரின்   பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது .நேற்று(4) இரவு பலமணி நேரமாக தொடர்மழை பெய்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு தாழ்வான பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளது.

குறிப்பாக புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதி இந்த மழை காரணமாக மூழ்கியுள்ளதோடு பல வர்த்தக நிறுவனங்களுகுள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதோடு வர்த்தக நிலையங்கள் பலவற்றில் பொருட்கள் பல வெள்ளத்தில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது.

வெள்ளத்தினை அகற்றி வரும் வர்த்தகர்கள் சீரான வடிகால் அமைப்புக்கள் இல்லாது தாம் தொடர்ந்து பாதிப்படைவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a comment