மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள் : சுற்றி வளைப்பில் 10 பெண்கள் கைது

Posted by - November 8, 2017

அநுராதபுர நகர எல்லைக்குள் ஆயுள்வேத மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில்  செய்து வந்த ஐந்து வீடுகளை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி அநுராதபுர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 25 இற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட 10 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 16 சோதனை பிடியாணைகளை பெற்றுக் கொண்டு குறித்த பகுதியை சுற்றிவளைக்க முயற்சித்தாலும் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த உரிமையாளர்களுக்கு

பெற்றோலிய அமைச்சின் தீர்மானம் வாபஸ்

Posted by - November 8, 2017

வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்த தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெற்றொலிய வளத்துறை அமைச்சினால் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதனை தற்பொழுது நீக்கிக் கொள்வதாகவும் அவ்வமைச்சு விசேட சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் கேட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் படி, மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி என்பவற்றுக்கும் பெற்றோல் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்தை நோக்கி செல்கின்றது-கலகொட

Posted by - November 8, 2017

நாட்டுக்குத் தேவையான பெற்றோலை சரியாக விநியோகித்துக் கொள்ள முடியாத ஒரு அரசாங்கம் தான் அதிகாரத்தைப் பகிரப் பார்க்கின்றது என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டினார். நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியினால் மாத்திரமே நாட்டைக் காப்பாற்ற முடியும்- மெதகொட அபயதிஸ்ஸ

Posted by - November 8, 2017

தற்போதுள்ள கள நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகவும் தகுதியான ஒரு தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தான் என இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். எளிய அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். நாட்டில் பொது எதிர்க் கட்சியென்று உள்ளது. இருப்பினும், இதுவரையில் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த எந்தவொரு சட்ட மூலத்தையும் அதனால்

அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு “9 பிளஸ்” தேவை- ஓமல்பே தேரர்

Posted by - November 8, 2017

தன்மையை அடைந்ததன் பின்னரேயே அரசியல் யாப்பு மாற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பது எமது சங்க சம்மேளனத்தின் நிலைப்பாடு என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். தற்பொழுதுள்ள அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதா? என்பதுவே முக்கிய பிரச்சினை. இருப்பினும், அங்கு பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டில்லை. இதற்காக வேண்டி அரசியலமைப்பில்  “9 பிளஸ்” முறையிலான மாற்றமொன்று அவசியம் எனவும் தேரர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்

பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கை

Posted by - November 8, 2017

பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையில் சிரியாவும் கைச்சாத்திடவுள்ளதாக அறிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை, உலக காலநிலை மாற்றத்திற்கு ஏற்க பூமி வெப்பமடைவதை தடுப்பதற்கு பல்வேறு நாடுகள் இணக்கம் தெரிவித்தன. இதில் சிரியாவும் நிக்கரகுவாவும் மாத்திரமே கைச்சாத்திடவில்லை. அதேநேரம் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதன் பின்னர், இந்த உடன்பாட்டில் இருந்து அமெரிக்காவை வெளியேறச் செய்தார். தற்போது குறித்த உடன்படிக்கையில் சிரியாவும் கைச்சாத்திடும் நிலையில், அமெரிக்கா தனிமைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் பியசேன கமகே பதவி ஏற்பு

Posted by - November 8, 2017

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நாளை பதவி ஏற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர் என்ற அடிப்படையில், 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கடந்த தினம் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டு, அவரால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்க உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது

Posted by - November 8, 2017

மாலபே  தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தேசிய பல் மருத்துவமனைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் அந்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 பெற்றோர் கலந்துகொண்டுள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

அரசியல் அமைப்பு பேரவை கூடவுள்ளது

Posted by - November 8, 2017

அரசியல் அமைப்பு பேரவை அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று முற்பகல் 10.30 அளவில் நாடாளுமன்றில் மீண்டும் கூடவுள்ளது. புதிய அரசியல் யாப்பு குறித்த வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான 5ஆம் நாள் விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில், கடந்த மாதம் 30, 31ஆம் மற்றும் இந்த மாதம் முதலாம் மற்றும் 2ஆம் திகதிகளிலும் விவாதம் இடம்பெற்றிருந்தது. இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மற்றுமொரு தினத்தை

மானஸ் தீவு அகதிகளின் வசதிகள் குறித்து நீதிமன்றத்தில் மேன்முறையீடு

Posted by - November 8, 2017

மானஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளுக்கான அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி, பப்புவா நியுகினி நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படவுள்ளது. அகதிகள் சார்பான சட்டத்தரணி பென் லோமி இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த முகாம் மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு, மின்சார, நீர் மற்றும் உணவு விநியோகம், மருத்துவ சேவைகள் என்பன ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள அகதிகள் 600 பேர் முகாமைவிட்டு வெளியேறு மறுத்து வருகின்றனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் நீக்கப்பட்டமையானது, அகதிகளின் உரிமை மீறலாகும்