செஞ்சி அருகே தினகரன் குடும்பத்துடன் அம்மன் தரிசனம்

Posted by - November 12, 2017

கடந்த சில நாட்களாக வருமானவரித்துறையினர் சசிகலா குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களில் தொடர் சோதனை நடத்திவரும் நிலையில் இன்று காலை விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செம்மேடு கிராமத்தில் உள்ள பிரத்யேகரா கோயிலில் அதிமுக அம்மா அணி துணைபொது செயலாளர் தினகரன் தன் மனைவி ,மகளுடன் அம்மன் தரிசனம் செய்துவிட்டு யாருடனும் பேசாமல் புறப்பட்டு சென்றார்.

உணவுப் பொருட்களில் பல வகைகளில் கலப்படம்: மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

Posted by - November 12, 2017

உணவுப் பொருட்களில் அதிக கலப்படம் செய்யப்படுகிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ குற்றம் சாட்டினார். மதுரை தமுக்கம் மைதானத்தில் மத்திய வேளாண் விவசாயிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனைத் துறை சார்பில் தேசிய அக்மார்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. இக்கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியதாவது: சில பொருட்களில் அக்மார்க் முத்திரை இருந்தாலும் கலப்படம் உள்ளது. அதுபோன்ற தவறுகளை செய்யும் நிறுவனத்தின் பொருட்களை நிரந்தரமாக தடை

குறை கூறுவதை நிறுத்துங்கள்; குடும்ப ஆதிக்கம் புகாமல் அதிமுக ஆட்சி தொடரும்

Posted by - November 12, 2017

நெல்லையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “தமிழகத்தில் ரூ.300 கோடி செலவில் மேலும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீர் விவசாயம், குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும். 3 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படும். அரசு மீது குறை சொல்வதை மட்டுமே திமுக

வங்காளதேசத்தில் 30 இந்துக்களின் வீடுகள் தீவைப்பு

Posted by - November 12, 2017

வங்காள தேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று ரங்பூர் மாவட்டம் தாகுர் புரா கிராமத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ‘பேஷ்புக்‘ சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக கூறி ஒரு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. ரங்பூர் மாவட்டத்தில் உள்ள 7 கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக திரண்டு தாகுர்பரா கிராமத்தை நோக்கி சென்றனர். அங்கு போராட்டத்தில்

இலங்கை மாலைத்தீவின் நெருங்கிய மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த நாடு

Posted by - November 12, 2017

இலங்கை மாலைத்தீவின் நெருங்கிய மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த நாடு என மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபிதி மவ்மூன் அப்துல் கயூம் தெரிவித்துள்ளார். மாலைத்தீவு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான எதிர் முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கம் உதவியளித்துவருவதாக மாலைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்ற நிலையில், அதனை தகர்க்க யாராலும் முடியாதென அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

2018ஆம் ஆண்டில் இலங்கையர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாவுக்கு கடனாளி

Posted by - November 12, 2017

2018ஆம் ஆண்டில் இலங்கையர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாவுக்கு கடனாளியாக இருப்பார் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் 2018 வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், இந்த கடனானது அடுத்த வருடத்தில் கடன்கொடுத்தோருக்கு திருப்பிச்செலுத்தவேண்டிய தொகையாகும் என்று குறிப்பிட்டுள்ளார் அரசாங்கம் பெருமளவு கடனை பெறுகின்றபோதும் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர் எனினும் அரசாங்கம் 1970 பில்லியன் ரூபாய்களை திருப்பிச்செலுத்தவேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மத்தள விமான நிலையத்தையும் அபிவிருத்தி செய்தமையை

இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடமொன்றினை நடாத்துவதாக வழக்கு தாக்கல்

Posted by - November 12, 2017

கிண்ணியா பிரதேச சபை  சூழல் பாதுகாப்பு உரிமமின்றி இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடமொன்றினை நடாத்துவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல்  செய்துள்ளது. கிண்ணியா-முனைச்சேனை பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான கால்நடைகளை இறைச்சிக்காக கொல்லும் இடம்மொன்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களால் பல தடவைகள் கள விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த பகுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, இந்த மாடு வெட்டும்  இடம் சுற்றாடலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இனம்

டெங்கு நோயினால்1 லட்சத்து 67 ஆயிரம் பேர் பாதிப்பு!

Posted by - November 12, 2017

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடம்பிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. தற்போதைய காலப்பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு, கம்பஹ, இரத்தினபுரி, புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நாஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.

சில மரக்கறி வகைகளின் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை!

Posted by - November 12, 2017

உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் போன்றவற்றை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த உற்பத்திகள் உள்நாட்டில் இருந்து கிடைக்கின்ற நிலையில், அவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பெரும் நெருக்கடி நிலை ஏற்படுவதாக சங்கத்தின் அமைப்பாளர் எச் எம் உபசேன தெரிவித்துள்ளார். இது குறித்து அரசாங்கம் தெளிவான தீர்மானம் ஒன்றை பெற்றுக்கொடுக்காதபட்சத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வு மாநாடு 15 ஆம் திகதி

Posted by - November 12, 2017

இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வு மனித உரிமை கணிப்பு ஒழுங்கு மாநாடு ஜெனீவாவில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஜெனீவா, பலேய்ஸ் டெஸ் நேஷன்சில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இலங்கை சார்பாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷா டி சில்வா கலந்து கொள்வார். இலங்கை தொடர்பாக, புரூண்டி, கொரிய குடியரசு மற்றும் வெனசூவேலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இணைப்பு தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமை பதிவுரு