2020ஆம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – அநுர

Posted by - January 3, 2017

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கமைய 2020 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட பகுதியிலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளை மேற்கொண்டவர்களை கைது செய்யும் செயற்பாடு உரிய வகையில மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்வரும் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன மேர்சன்ட் என்ற நிறுவனத்திற்கு கையளிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்த ஒப்பந்தம்

நாட்டை சர்வதேச மயப்படுத்தும் செயற்திட்டத்தில் அரசாங்கம் – மஹிந்த

Posted by - January 3, 2017

நாட்டை சர்வதேச மயப்படுத்தும் செயற்திட்டம் ஒன்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். எம்பிலிபிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமது ஆட்சி காலப்பகுதியில் துறைமுகம் மற்றும் வானுர்தி தளம் என்பன நிர்மாணிக்கப்பட்டன. அவை தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்காக சீனாவை குற்றம் சுமத்த முடியாது. இந்தநிலையில் திட்டமிட்ட வகையில் நாட்டை சர்வதேச மயப்படுத்தும் செயற்திட்டம் ஒன்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி

பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரப்படும்- மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி

Posted by - January 3, 2017

  உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தேர்தல்களை தொடர்ந்தும் காலதாமதப்படுத்துவதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி அறிவித்துள்ளது. அமைச்சர் பைஸர் முஸ்தபா மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமை பறித்துள்ளதாக குற்றம் சாட்டிய ஒன்றிணைந்த எதிர்கட்சி, அமைச்சர் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சியான பிவித்துரு ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்

விபத்தில் தாயும் மகளும் பலி

Posted by - January 3, 2017

களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். முச்சக்கர வண்டி ஒன்றும் பேரூந்து ஒன்றும் மோதுக் கொண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளுமே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த முச்சக்கர வண்டியை பெண் ஒருவரே செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு இராணுவ விமானங்களை புதிய வருடத்தில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

Posted by - January 3, 2017

சீன உற்பத்தியில் உருவான வை.20 ரக இரு இராணுவ  விமானங்களை புதிய வருடத்தில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இராணுவ வீரர்களை ஏற்றிச் செல்வதற்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக இராணுவ உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த விமானங்களை சீனாவிலிருந்து கொள்வனவு செய்வதற்கு அமெரிக்க விமான சேவை அதிகாரிகளின் அனுமதியை இலங்கை அரசாங்கம் பெற வேண்டி வரும் எனவும் கூறப்படுகின்றது. மணித்தியாலத்துக்கு 918 கிலோமீற்றர் வேகம் பயணிக்கக் கூடிய இந்த விமானம் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பாகிஸ்தானிய கப்பல்கள் இலங்கைக்கு

Posted by - January 3, 2017

பாகிஸ்தானிய கடல் பாதுகாப்பு கப்பல்கள் இரண்டு இலங்கை வரவுள்ளன. நல்லெண்ண அடிப்படையில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு நாள் விஜயமாக இலங்கை வரும் இந்த கப்பல்கள் எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரையில் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயமானது இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தம் வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவன்காட் தவிர்ப்பால் அரசாங்கத்திற்கு 226 கோடி ரூபாய் வருமானம்

Posted by - January 3, 2017

எவன்காட் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த கடல் பாதுகாப்பு கடமைகள் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் கடந்த வருடம் 226 கோடி ரூபாய்களை அரசாங்கம் வருமானமாக ஈட்டியுள்ளது. கடற்படை இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த வருடம் ஆரம்பம் முதல் 6 ஆயிரத்து 371 தேடுதல்கள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரத்து 928 தேடுதல்கள் காலி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈட்டப்பட்ட வருமானம் அரசாங்கத்தின் ஒன்றிணைந்த நிதியத்தில் கடற்படையால் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட நெற் களஞ்சியசாலையிலிருந்து தென் பகுதிக்கு நெல் கொண்டு செல்லப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் (காணொளி)

Posted by - January 3, 2017

வவுனியா அரசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அரசி ஆலை களஞ்சியசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியுள்ளனர். வவுனியா – பாவற்குளம் படிவம் 6 களஞ்சியசாலையிலேயே இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட நெற் களஞ்சியசாலையிலிருந்து தென் பகுதிக்கு நெல் கொண்டு செல்லப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பாவற்குளம் படிவம் 6 நெற்களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லை தென் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக லொறிகள் வந்திருந்த நிலையிலேயே இந்த போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

Posted by - January 3, 2017

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார். அரிசி விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக அடுத்த வாரம் ஒரு தொகை அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை நியாயம் நிலை நாட்டப்படவில்லை- மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

Posted by - January 3, 2017

  திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை நியாயம் நிலைநாட்டப்படவில்லை என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிடுகின்றனர். இந்த சம்பவமானது யுத்தக் காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல் சம்பவம் என கூறப்பட்டு வருவதாக பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதனைத்