நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை காணப்படவில்லை
நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை காணப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை காணப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்த நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தர பகுதியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீடு உடைப்பு உள்ளிட்ட சில கொள்ளைச் சம்பவங்களுடன் அவர்கள் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கின், சாட்சி விசாரணைகளை தொடர்ச்சியாக பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டே நாகவிகாரையின் தலைமை விகாராதிபதி பதவிக்காக போட்டியிட்டிருந்த தென்கொரியாவின் பிக்கு யுங் மூன் ஒவ் நேற்று நாடு கடத்தப்பட்டார். குறித்த விகாரையில் தங்கியிருந்த நிலையில் அவர் அமைச்சர் எஸ். பி. நாவின்னவின் உத்தரவின்பேரில் அவர் நேற்று இரவு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விகாரைக்கு சென்ற குடிவரவு அதிகாரிகள், மீரிஹான பொலிஸாரி;ன் உதவியுடன் அவரை நாடு கடத்தினர். குறித்த தென்கொரிய பிக்கு, 2000 ஆம் ஆண்டு முதல் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்துள்ளார். இவ்வாறு நான்காவது முறையாக வந்தபோது
பொதுமன்னிப்பு காலத்தில் படைகளில் இருந்து சட்டரீதியாக தம்மை விடுவித்துக்கொள்ளாமல் முப்படைகளில் இருந்து தப்பிச்சென்றவர்கள் நாட்டில் இருந்து தப்பிச்செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது. முப்படைகளிலும் உள்ள விடுமுறை அனுமதியில்லாமல் சேவைக்கு வராமல் இருந்தவர்களை சட்டரீதியாக சேவையில் இருந்து நீக்குவதற்கான பொதுமன்னிப்புக்காலம் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி முடிவடைந்தது. இந்தக்காலத்தில் 34 அலுவலர்கள் உட்பட்ட 9ஆயிரம் படையினர் பொதுமன்னிப்பை பெற்றனர்.
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 1 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுக்களின் தலைவர் லோர்ட் நெசபியிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறையில் ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையில் இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை நேற்று அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியிடமிருந்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த அறிக்கையை பெற்றுக் கொண்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 2016ஆம் ஆண்டு மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் இந்த செயலணி நியமிக்கப்பட்டது. இதையடுத்து, சமூகத்தின் பல்வேறு மட்டங்களில்
ரயிலில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று இருப்பதாக, பொய்யான தகவலை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிவித்த இளம் யுவதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சீதுவ பிரதேசத்தில் ஹெரோயினுடன் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து சீதுவ நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது குறித்த இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 4 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மற்றும் மீரிஹான பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையினை பாதுகாக்கும் நோக்கிலான வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தினை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதியை நீடிப்பது தொடர்பான யோசனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.