நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்து: 100 பேர் காயம்

Posted by - January 5, 2017

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. ப்ரூக்லன் ரெயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா ஊழல்’ வழக்கில் தினமும் விசாரணை

Posted by - January 5, 2017

பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா ஊழல்’ வழக்கில், தினந்தோறும் விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முடிவு செய்தது.

2017 பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள்

Posted by - January 5, 2017

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:2017-ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை முதல் 19ம் தேதி வரை சென்னையில் புத்தக கண்காட்சி

Posted by - January 5, 2017

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் காந்தி கண்ணதாசன் கூறியதாவது: பபாசியின் சார்பில் இந்த ஆண்டு 40வது  புத்தக கண்காட்சி நாளை தொடங்கி 19ம் தேதி வரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. இதில் 700 அரங்குகள் இடம் பெறுகின்றன. 10 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் அரங்குகளில் இடம் பெறும். அவற்றில் 350 தமிழ் புத்தக பதிப்பகங்களும், 153 ஆங்கிலப் புத்தக பதிப்பகங்களும்

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை முடிவடைந்தது

Posted by - January 5, 2017

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து விட்டதாக வானிலை ஆய்வுமையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும், இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவாக மழை பெய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி வகுப்பு

Posted by - January 5, 2017

புதிய தொழில்நுட்பத்தில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி வகுப்புகள் சென்னையில் 13-ந் தேதி வரை நடக்கிறது.

சேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் கைது செய்யவில்லையே? நீதிபதி

Posted by - January 5, 2017

சேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் இதுவரை கைது செய்யவில்லையே என்று சிறப்பு கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

கனடாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கு வடக்கு, கிழக்கிலிருந்து பிரதிநிதிகள்- பத்மநாதன் சத்தியலிங்கம்

Posted by - January 4, 2017

கனடாவில் இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி சர்வதேச மாநாட்டிற்கு வடக்கு, கிழக்கிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். சர்வதேச மாநாடு தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு வழங்கி செவ்வியில் இதனைத் தெரிவித்தார். வடக்கு சுகாதார அமைச்சர், வடக்கு கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், கல்வி அமைச்சர் உட்பட வடக்கு கிழக்கிலிருந்து 20 இற்கும் மேற்பட்டவர்கள் குறித்த கனடா மாநாட்டிற்கு செல்லவுள்ளதாகவும், இம்மாநாடு

நீதிமன்ற கட்டமைப்புக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது-ராஜித சேனாரத்ன

Posted by - January 4, 2017

நீதிமன்ற கட்டமைப்புக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து உரையாற்றிய ராஜித சேனாரத்ன.. அரசாங்கத்திற்கு நிரந்தரமான ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது. ஒவ்வொரு அமைப்புகளுக்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எந்தவொரு விடயத்தையும் முன்மொழிய முடியும். வெளிநாட்டு பிரதிநிதிகள் இதில் இடம்பிடிக்க மாட்டார்கள் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.

பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை-ராஜ்நாத் சிங்

Posted by - January 4, 2017

பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை என இந்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை எதிர்காலத்திலும் இது போன்ற அரசியலை நடத்தாது. அவ்வாறு நடத்தியிருந்தால், லோக்சபாவில் பெரும்பான்மை பலம் பெற்றிருக்க முடியாது. உத்தர பிரதேச தேர்தல் களத்தில் மத ரீதியிலான அரசியலை பாரதிய ஜனதா கட்சி முன்வைக்காது. மதம், ஜாதியை முன்வைத்து வாக்குக் கேட்கக் கூடாது என