டொனால்டு டிரம்பை விரைவில் சந்திக்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்பை பிரிட்டன் பிரதமர் தெரசா மே விரைவில் சந்திக்க உள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்பை பிரிட்டன் பிரதமர் தெரசா மே விரைவில் சந்திக்க உள்ளார்.
சர்வதேச அளவில் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 17 ஆயிரத்து 693 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : பொங்கலை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் வரும் 11, 12, 13 ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் நீண்ட தூர பேருந்துகள் அண்ணாநகர் (மேற்கு), தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி, அடையாறு பேருந்து நிலையம், கோயம்பேடு
தமிழகத்தில், பருவமழைகள் பொய்த்துப் போனதால் அணை, ஏரி, குளங்கள் வறண்டன. இதன்காரணமாக, டெல்டா பகுதி மற்றும் திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, எள், மக்காச்சோளம், மஞ்சள் போன்ற பயிர்கள் கருகின. இந்த வேதனையை தாங்காமல் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்தும் 122 விவசாயிகள் உயிரை இழந்துள்ளனர். இது, மேலும் 22 உயர்ந்து 144 ஆனது. புதுக்கோட்டையில் 2 பெண்கள்: புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் அருகே உள்ள தேக்காட்டூரை சேர்ந்தவர் செல்லம்மாள் (70).
அணைகள், ஏரிகள் வறண்டு வரும் நிலையில் 2 மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், குடிநீர் பிரச்னையை சமாளிக்க ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுக்கவும் யோசனை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30ம் தேதிக்கு பிறகு தொடங்கியது. ஆனாலும், ஆங்காங்கே லேசான மழை தான் பெய்தது. எதிர்பார்த்தப்படி தீவிரமடையவில்லை.
தமிழகம் முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு நிவாரணமே கிடைக்கவில்லை என சரமாரியாக குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர்கள் அங்கிருந்து காரில் பறந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் தண்ணீரின்றி வறண்டன. இதன் காரணமாக, பாசனத்துக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள்
ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினரின் தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகளும், 2 வீரர்களும் உயிரிழந்தார்கள்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். புளோரிடா மாகாணத்தில் உள்ள லவுடெர்டேலே விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டதும் விமான நிலையத்தில் இருந்த நூற்றுக் கணக்கான மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் 23-ந் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா ஏ9 வீதி இலங்கை போக்குவரத்து சபை காரியாலத்திற்கு அருகே, இன்று மாலை 4.00 மணியளவில் பட்டா ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளாகியுள்ளது. வவுனியாவிலிருந்து மதவுவைத்தகுளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியின் மறுபக்கம் செல்ல முற்பட்ட போது, வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பட்டாரக வாகனத்தில் பயணித்தவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.