கினிகத்தேனை-அம்பகமுவ பிரதேசபகுதியில் திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியது(காணொளி)
நுவரெலியா கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கினிகத்தேனை-அம்பகமுவ பிரதேசபகுதியில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்தவீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்டபோது வீட்டில் இவர்கள் நித்திரை கொண்டிருந்ததாகவும், பிறகு எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன்பிறகு அயலவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க

