ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்தில் பதற்ற நிலை
ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது. இதனையடுத்து ஹம்பாந்தோட்டையின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்த நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. எவ்வாறாயினும் அங்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியிருந்தார். இதனையடுத்து இன்று காலை ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்திற்கு அண்மையில் எதிர்ப்பு நடவடிக்கையில்

