13 கிலோ கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் ஒருவர் கைது

Posted by - January 7, 2017

திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியில் 13 கிலோ 550 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கேரள கஞ்சாவுடன் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு இணைப்பில்லாத அரசியல் அமைப்பை ஏற்க முடியாது – சுரேஷ்

Posted by - January 7, 2017

வடக்கு, கிழக்கு இணைப்பு இல்லாத ஒரு அரசியல் அமைப்புக்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்தார்.

கடுமையான தீர்மானங்களை எடுப்பார் ஜனாதிபதி – லக்ஷ்மன் யாபா

Posted by - January 7, 2017

நாட்டினதும் கட்சியினதும் நலனுக்காக எதிர்காலத்தில் கடுமையான தீரமானங்களை ஜனாதிபதி எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சர்வாதிகார போக்குடன் செயற்பட்டதை ஸ்ரீ பதி சூரியராச்சி மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து கண்டுகொள்ள முடியும். தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறெனினும், கட்சியின் நலன்

அபிவிருத்தியை சீர்குலைக்க நாமல் முயற்சி – சாகல குற்றச்சாட்டு

Posted by - January 7, 2017

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை சீர்குலைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டபோதே சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஹம்பாந்தோட்டை மக்களின் நலனுக்காக மட்டுமல்ல, முழு நாட்டு மக்களினதும் நலனுக்காக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம். முன்னதாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக மூன்று பேர் மட்டுமே நன்மை அடையக்கூடியதாக இருந்தது. ஆனால், நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும்

பலமிக்க இலங்கையை கட்டியெழுப்புவதை எவரும் தடுக்க முடியாது – ரணில்

Posted by - January 7, 2017

பலமிக்க புதிய இலங்கையை கட்டியெழுப்புவதை எவருக்கும் தடுத்து நிறுத்த முடியாதென்றும், பலமிக்க நிரந்தர எதிர்காலம் ஹம்பாந்தோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். 2015 ஜனவரி 8ம் திகதி மைத்திரிபால சிறிசேனவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததுஇ நாட்டின் சாதாரண மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை கொடுப்பதற்கு. இளைஞர் யுவதிகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை வழங்குவதற்கு. நாம் தேசிய அரசாங்கத்தை

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தில் 21 பேருக்கு காயம்

Posted by - January 7, 2017

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுள் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் உள்ளடங்குவதாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார்.கல் வீச்சு தாக்குதலில் காயமடைந்தவர்களே அதிகமானவர்கள் இருப்பதாக அவர் கூறினார். இன்று காலை ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்திற்கு அண்மையில் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டையில் 5 பில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்கிறது சீனா

Posted by - January 7, 2017

அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டு வரையான காலப்பகுதியில், ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா முன்வந்துள்ளது. ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பினூடாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பிரச்சினை

Posted by - January 7, 2017

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பாக பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்காமல் தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறுகின்றார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களிடையே விஷேட சந்திப்பு

Posted by - January 7, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இங்கு

மாவட்டத்தில் முதலாமிடம் பெற்ற மாணவி விபத்தில் பலி

Posted by - January 7, 2017

அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3 ஏ சித்திபெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா தனது சிறிய தாயாரான வைத்தியர் கௌரி மனோகரி நந்தகுமாருடன் வாகனத்தில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருக்கையில் குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். மிகச்சிறந்த பெறுபேற்றை பெறக்கூடிய மாணவி என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட இம் மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளார் என்பது