தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழா-2017

Posted by - January 8, 2017

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலில் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டதரணி டபிள்யு.ஜீ.எஸ்.எரந்திக அவர்களின் தலைமையில் தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழா-2017 இம்முறை தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய மைதானத்தில் சிறப்புற இடம்பெறவுள்ளது  2000 இளைஞர், யுவதிகளின் பங்களிப்புடன் இளைஞர் கழக சம்மேளனம்,தேசிய இளைஞர் சேவை மன்றம்,தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு,கைத்தொழில் மற்றும் வாணிக அமைச்சு மற்றும் வட மாகாண

இளைஞர் சேவை அதிகாரிகள் கௌரவிப்பு

Posted by - January 8, 2017

2016 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொண்டு  மாவட்டத்திற்கும், வட மாகாணத்திற்கும் பெருமை ஈட்டிய  இளைஞர் சேவை அதிகாரிகளுக்கான பாராட்டு விழா பதிவுகள்நேற்று  மாங்குளத்தில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது  அந்தவகையில் இளைஞர் முகாசிறப்புற நடத்தியமைக்காக. திரு.செ.சுஜிதரன் அவர்களுக்கும் இளைஞர் பாராளுமன்றத்திற்கு அதிக வாக்களிப்பு வீதத்ததை உருவாக்கியமைக்காக திரு.ஜெ.சுகந்தன் – . திரு.க.சிந்துஜன்  திரு.அ.ஜெயாளன்ஆகியோருக்கும் கௌரவிப்பு இடம்பெற்றது இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்

இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவில் கிழக்கு முதலிடம் வடக்கிற்கு இரண்டாமிடம்

Posted by - January 8, 2017

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவு செய்தன் அடிப்படையில் 63.68 வீத வாக்குபதிவின் மூலம்   கிழக்கு  மாகாணம்முதலிடம் பெற்றுள்ளதோடு 43.69 வீத வாக்க பதிவின் மூலம்  வடக்கிற்கு இரண்டாமிடம்  கிடைக்கப்பட்டதோடு 41.02 வீத வாக்குபதிவில் ஊவா மாகாணம் மூன்றாமிடத்திலுள்ளது அந்தவகையில்  வாக்கு பதிவின் அடிப்படையில் 85.14 வீத வாக்குபதிவின் மூலம் மட்டக்களப்பு மாவட்டம் முதலாமிடத்திலும் 65.36  வீத வாக்குபதிவின் மூலம் மொணராகலை  மாவட்டம் இரண்டாமிடத்திலும். 56.35வீத வாக்குபதிவின் மூலம் அம்பாறை மாவட்டம் மூன்றாமிடத்திலும்

விடாமுயற்சியை விருப்பத்துடன் காட்ட வேண்டும்-உயிரியல் பிரிவில் முல்லையில் முதலிடம் பெற்ற மாணவி

Posted by - January 8, 2017

நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் இன்று வெளியாகிய பெறுபேறுகளினடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் 3A பெறுபேறுகளை பெற்று மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வி செல்வநாயகம் சுபநேத்ரா முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார். தனது வெற்றிப்பயணம் குறித்து கருத்து தெரிவித்த சுபநேத்ரா , எனது பெயர் செல்வநாயகம் சுபநேத்ரா,வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளின் படி நான் முஜ்ல்லைதீவு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று சாதிப்பதற்கு அருளிய இறைவனுக்கு முதல் நன்றி கூறுகின்றேன். என்னுடைய

முல்லைத்தீவில் வறட்சி – பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

Posted by - January 8, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தை வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தி வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மீளாய்வு கூட்டம் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே ஆணையாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மாவட்டத்தில் எமது திணைக்களத்தின் கீழ் உள்ள 40 வரையான குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் – 23 பேருக்கு விளக்கமறியல்

Posted by - January 8, 2017

ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலையத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 21 பேரை நாளைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்க ஹம்பாந்தோட்டை நீதவான் உத்தரவிட்டார். மேலும் இரண்டு பேரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் கைக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அரச உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்ட கைத்தொழில் வலையம்

மைத்திரி – சந்திரபாபு நாயுடு சந்திப்பு

Posted by - January 8, 2017

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு பூர்தி நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன. பிரதான நிகழ்வு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதனிடையே, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தி நிகழ்வில் பங்கேற்க இலங்கை வந்துள்ள, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் சினேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு, குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில்

கடனா பொதுமக்களை இன்று சந்திக்கிறார் சீ.வி

Posted by - January 8, 2017

கடனா சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று அங்குவாழும் பொதுமக்களை சந்திக்க உள்ளார். வடமாகாண முதல்வருடன் பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிதி சேர்நிகழ்வாக ‘முதல்வரோடு ஒரு மாலைப்பொழுது’ என்னும் இந்த நிகழ்வு Pearson Convention centerஇல் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை ரொறண்டோ சென்றார். இந்த விஜயத்தின் போது, அவர் ரொறண்டோ பெரும்பாகத்தின்மார்க்கம், பிரம்ரன் நகரங்களோடு வடபகுதியுடனான இரட்டை நகர உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் சமூகம் சார்ந்த மற்றும் கனடிய அரச மட்ட சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடு விவசாயிகளுக்கு பாதிப்பு – மஹிந்த

Posted by - January 8, 2017

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானமானது உள்ளுர் விவசாயிகளை புறக்கணிக்கும் செயல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான கலந்துரையாடல் சென்னையில்

Posted by - January 8, 2017

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை முன்வைக்க இந்திய சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் தயாராவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பிலான விசேட சந்திப்பு நாளை சென்னையில் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் நாடுகடந்த தமிழீழம் சார்பில் அதன் தலைவர் ருந்ரகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இலங்கை விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் ஒந்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி ஒருபோதும் தயார் இல்லை என