குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல்முறையாக ஓ. பன்னீர்செல்வம் கொடி ஏற்றுகிறார்
குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல் முறையாக ஓ. பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.
குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல் முறையாக ஓ. பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.
அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ளது, போர்ட் லாடர்டேல் விமான நிலையம். அந்த விமான நிலையத்தின் 2வது முனையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை பெற்றுக்கொள்கிற இடத்தில் நேற்று முன்தினம் ‘ஸ்டார் வார்ஸ் மேல் சட்டை’ அணிந்த வாலிபர் ஒருவர் புகுந்து, தன் கைத்துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார். இதனால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். அனைவரும் ஓலமிட்டவாறு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதை வழக்கமாக பாகிஸ்தான் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளை வளர்த்து விட்ட பாகிஸ்தான், அதற்கே களப்பலியாகவும் ஆகி வருகிறது. ஆனால் அங்கு பலுசிஸ்தான், கராச்சி, பழங்குடியினர் வாழ்கிற தன்னாட்சி பகுதிகளில் நடக்கிற பயங்கரவாத தாக்குதல்களில் இந்தியாவின் தலையீடுகள் இருப்பதாக குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையில் இது தொடர்பான ஆவணம் ஒன்றை நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் புதிய பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ்சை ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி மாலீஹா லோதி நேற்று முன்தினம் சந்தித்து ஒப்படைத்தார்.
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். பாரதீய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. இதில் உரையாற்றிய பிரதமர், ஊழல், கருப்புபணத்தை ஒழிப்பதற்கான நீண்டகால நடவடிக்கையின் ஒரு பகுதிதான், உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் இருந்து நீக்கியது.
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் இன்று வெளியாகிய பெறுபேறுகளினடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் 2A B பெறுபேறுகளை பெற்று புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி மாணவன் சந்திரபாலன் சதுர்ஷன் முதல் நிலையை பெற்றுள்ளார். தன்னுடைய பெறுபேறுகள் குறித்து கருத்து தெரிவித்த சதுர்ஷன் சந்திரகுமார் சதுர்ஷன் ஆகிய நான் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் 2AB சித்திகளைப்பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முத்லிடத்தைப்பெற்றுள்ளேன். என்னுடைய வெற்றிக்கு ஊக்கமளித்த, பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும்
இலங்கை ஐனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்று அதாவது ஐனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவை ஒட்டி முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்த சுமார் 30 அங்கத்தவர்கள் மாஞ்சோலை பொதுவைத்தியசாலையில் உள்ள பிராந்திய இரத்த மத்திய நிலையத்தில் இரத்ததானம் வழங்கினார்கள். மேற்படி நிகழ்வு சனிக்கிழமை காலை 9 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை இரத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதில் சிவில்பாதுகாப்பு திணைக்களத்தைச்சேர்ந்த ஆண்கள் பெண்கள் என சுமார் 30 பேர்
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் வெளியாகிய பெறுபேறுகளின் படி முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் முன்னிலை பெறுபேறுகளை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி தனதாக்கியுள்ளது. இதனடிப்படையில் விஞ்ஞான பிரிவில் ….. செ-சுபனேந்திரா-3A- மாவட்ட நிலை -1 காஷ்ஷனி-2BC – மாவட்ட நிலை- 12 ஷகானா-B2C -மாவட்ட நிலை- 11 பெலோமினி -2BC-மாவட்ட நிலை- 19 கணித பிரிவில் ….. S.சதுர்சன் 2AB-மாவட்ட நிலை -1 வர்த்தக பிரிவில் ……. T.தஞ்சுதா-3A-மாவட்ட நிலை -1 J.டிலக்சனா -3A-மாவட்ட நிலை -2
முல்லைத்தீவு மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் நுண் நிதி திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை கரைதுறைப்பற்று பிரதேசசபை கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது. தனியார் நுண்நிதி நிறுவனங்களினால் அதிக வட்டி வீதத்தில் வழங்கப்படும் கடன்களை ஏழை மக்கள் பெற்றுக்கொள்வதனால் உரிய காலப்பகுதிகளிற்கு அதனை மீள செலுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்படுவதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் குடும்பங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அண்மைக்காலமாக பல தற்கொலைகளும் இடம்பெற்று வருகின்றது. இந்த நுண் நிதி திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையிலும் தற்போது நாட்டில் காணப்படும் போலி நாணய
முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை பொது வைத்தியசாலை வளாகத்திற்குள் நடமாடித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது. மேற்படி வைத்திய சாலை வளாகத்தினுள் கட்டாக்காலிகள் சுதந்திரமாக நடமாடுவதுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கும் பணியாற்றும் பணியாளர்களுக்கும் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவருகின்றன. ஆத்தோடு வைத்தியசாலை சொத்துக்களுக்கும் சேதங்களை விளைவிக்கக்கூடிய ஆபத்தும் காணப்படுகின்றது எனவே இவ்விடயம் தொடர்பில் உரியவர்கள் கவனமெடுத்து செயற்படவேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையின் ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டும், நல்லாட்சி அரசின் இரண்டாட்டு நிறைவை முன்னிட்டும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சர்வமத பிரார்த்தனை சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பௌத்த மத துறவி மற்றும் முல்லைத்தீவு பங்குத்தந்தை முல்லைத்தீவு பெரிய பள்ளிவாசல் மௌலவி வற்றாப்பளை கண்ணகி அம்மன் தேவஸ்தான பிரதம குருக்கள் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி சர்வமத பிரார்த்தனைகளில்