செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்(காணொளி)
வவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். குறித்த பாடசாலையில் 538இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் 15 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர் என்றும், பின் தங்கிய குறித்த பாசாலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர். குறித்த பாடசாலையில் இடப்பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறை என்பன

