மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது- துமிந்த திஸாநாயக்க

Posted by - January 9, 2017

2020ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட மிகவும் தகுதியான நபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் தன்னால் ஒரு முறை மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காடடியுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளரான துமிந்த திஸாநாயக்க இதனை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு

பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்திற்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை (காணொளி)

Posted by - January 9, 2017

பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்திற்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்ட இடமாற்ற கொள்கையில் முரண்பாடு ஏற்படுமாயின் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு அறிவித்துள்ளனர்.]

வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் 2017 வருடாந்த ஆரம்பவிழா (காணொளி)

Posted by - January 9, 2017

வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் 2017 வருடாந்த ஆரம்பவிழா இன்று வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயாலயத்தில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் கி.நந்தபாலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சரும் பதில் முதலமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் உலக உணவுத்திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் இயக்குநர் டேவிட் கற்குட், உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரண்டா பேட்டன்

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது (காணொளி)

Posted by - January 9, 2017

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் 1200 கிராம் கஞ்சாவுடன், நீர்கொழும்பைச் சேர்ந்த 30 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆர்ப்படுத்தப்பட்ட நிலையில்,நீதிமன்று சந்தேக நபரை சம்பவம் தொடர்பில் வினவியபோது, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றிற்கு முன்னால் அமைந்துள்ள  துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும், தாம் சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் மன்றில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக

கல்முனை பிராந்தியத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - January 9, 2017

  அம்பாறை கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட நற்பிட்டிமுனை ஆயள்வேத மத்திய மருந்தகத்தை, தற்காலிக கட்டடத்திற்கு இடமாற்றியமையைக் கண்டித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்தியத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பினர் இணைந்து மேற்கொண்டனர். நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் சீ.எம்.ஹலீம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர், சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கல்முனை

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து மூன்று உடன்படிக்கைகளும் சபைக்கு வரும்

Posted by - January 9, 2017

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான மூன்று உடன்படிக்கைகளையும் சபையில் சமர்ப்பிப்பதாக பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமளி!

Posted by - January 9, 2017

அம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட உள்ள வர்த்தக வலயத்திற்காக காணிகளை கையகப்படுவதற்கு எதிராகவும் மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டதால், நாடாளுமன்றத்தில் இன்று அமளி ஏற்பட்டது.

மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை சகோதரருக்கு வழங்கிய நாமல்!!

Posted by - January 9, 2017

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை தனது சகோதரரான ரோஹித ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ளார்.

இனவாதத்தை தூண்டி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி!

Posted by - January 9, 2017

வவுனியா பிரசேதத்தில் உள்ள விகாரைகளை சேர்ந்த பிக்குமார் மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேசத்தில் மரிச்சுக்கட்டி, கரடிக்குளம், முள்ளிக்குளம், பாவக்குழி, அலக்கட்டு, கூமாங்குளம் ஆகிய கிராமங்களுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.