யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது உழவு இயந்திரம்

Posted by - January 11, 2017

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ரயிலுடன் மோதி உழவு இயந்திரம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானது. இருப்பினும் குறித்த உழவு இயந்திரசாரதி மற்றும் அதில் பயணம் செய்த இருவர் காயங்கள் ஏதும் இன்றி தெய்வாதீனமாக உயிர்தப்பினர். உழவு இயந்திரத்தின் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என தெரியவருகின்றது. பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் திருத்தம் , அரசு இணக்கம்

Posted by - January 11, 2017

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விரைவில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளது. புதிதாக கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவு ஆவணம் கடந்த ஆண்டு செப்டெம்பரில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வரைவு ஆவணம், வெளியே கசிந்த நிலையில், அதில் இடம்பெற்றிருந்த பல்வேறு விடயங்கள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மூல வரைவில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்த திருத்தங்கள் தொடர்பாக,

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக ஐந்து வழக்குகள்

Posted by - January 11, 2017

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக ஐந்து வழக்குகள் மார்ச் மாதம் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக தமது சொத்து விபரங்களை ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்காமை தொடர்பில் ஜொன்ஸ்டனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை எதிர்வரும் மார்ச் மாதம் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார நேற்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைகளின் முதலாம் சாட்சியாளர் உடல் நலக் குறைவினால் நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.

மைத்திரி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் – சந்திரிக்கா

Posted by - January 11, 2017

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடச் செய்யும் எந்தவொரு தீர்மானத்தையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுக்க வில்லையென முன்னாள் ஜனாதிபதியும் அக்கட்சியின் போஷகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை நீக்கிஇ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லையென்ற தீர்மானத்துடனேயே அவர் ஜனாதிபதியானார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தான் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக உள்ளேன். நான் அறிந்த வரையில் 2020 இல் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக

விமல் வீரவன்சவின் பாதுகாப்பு கருதி தனி அறையில் தடுத்து வைப்பு

Posted by - January 11, 2017

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு மகசீன் சிறையின் ஈ அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஈ அறையில் கிட்டத்தட்ட 50 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமல் வீரவன்சவின் பாதுகாப்பிற்காக ஈ சிறைச்சாலை தொகுதியில் தனியான அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச போன்றோர் இந்த அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க

நான் பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் மீளவும் கோரப் போவதில்லை- மஹிந்த

Posted by - January 11, 2017

பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தம் கூறுகையில்… அம்பாந்தோட்டையில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்ற பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதலுக்கு இலக்கான குண்டர்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் போதுஇ தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எந்த காரணிகளின்இ

வட மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை

Posted by - January 11, 2017

வட மாகாணத்தில் உள்ள  சகல பாடசாலைகளும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு  எதிர்வரும் வெள்ளிக்கிழமை  மூடப்படும் என வட மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை தினத்துக்குப் பதிலாக எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என வட மாகாண கல்வி அமைச்சரின் செயலாளர் இ. இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏழு முறை சிறையில் போட்டாலும் விமலின் வாயை மூடிவிட முடியாது- மஹிந்த

Posted by - January 11, 2017

விமல் வீரவங்சவை ஒரு முறையல்ல, ஏழு முறை சிறையில் போட்டாலும் அவரின் வாயை இந்த அரசாங்கத்தினால் அடைக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக உள்ளது. நீதிமன்றங்கள் இன்று வலுக்கட்டாயமாக நிர்ப்பந்திக்கப்படுகின்றன எனவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம்சாட்டினார். ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையிலேயே விசாரணைகளும், கைதுகளும் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மகஸின் சிறைச்சாலைக்கு விமல் வீரவங்சவைப் பார்ப்பதற்கு விஜயம் செய்த போது, அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதன்போதே இவ்வாறு கூறினார்.

ஹெல்பொட பகுதியில் தேயிலை தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

Posted by - January 11, 2017

நுவரெலியா கொத்மலை – கிட்டுகிதுல – ஹெல்பொட பகுதியில் தேயிலை தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஹெல்பொட தோட்டத்தைச் சேர்ந்த 47 வயதான பெண்ணொருவரே இவ்வாறு வழுக்கி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழுந்து பறிக்கும் பெண்களை கண்காணிக்கும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வகுகவ்பிட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக

இந்நாட்டிலுள்ள எந்தவொரு சொத்தையும் விற்பதற்கு அல்லது வேறு நாட்டிற்கு விற்பனை செய்வது அரசாங்கத்தின் குறிக்கோளல்ல- அர்ஜீன ரணதுங்க

Posted by - January 11, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும்போது, நாட்டிற்கு நன்மைபயக்கும் செயற்பாடுகளையே முதன்மைப்படுத்தி மேற்கொள்ளவுள்ளதாக, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்திற்கு தேர்வுபெற்ற துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதலீட்டாளர்களை வரவழைக்கும் பொழுது நாட்டிற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் முன்னெடுக்க தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி தனக்கு வழங்கியுள்ளதாக, அமைச்சர் அர்ஜூன அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து