தபால் மூலம் நடாத்தப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விசாரணை
தபால் மூலம் நடாத்தப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதியொன்றில் 84 கிராம் ஹசிஸ் மற்றும் 1358 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பொதி ஸ்பெயினிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இரவு

