இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றது- எம்னெஸ்டி இன்டர் நேஷனல்

Posted by - January 12, 2017

நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றமையானது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் நிலைநாட்டப்படுகின்றமை எட்டாக்கனியாக இருக்கும் என எம்னெஸ்டி இன்டர் நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள், காணாமல் போனோரின் குடும்பங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு உரிய நியாயம், உண்மை மற்றும் இழப்பீடுகள் கிடைக்கின்றமை எட்டாக்கனியாக இருக்கும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச சட்டவிதிமுறைகளுக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள நல்லிணக்க செயலணியின் கண்டுபிடிப்புக்கள் அடங்கிய அறிக்கையை, இலங்கை

நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்

Posted by - January 12, 2017

நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 3ம் திகதி நல்லிணக்க செயலணியின்  வெளியிட்டிருந்த இந்த அறிக்கையின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளது.

தமிழ் அரசியல் தலைமை உண்மையைச் சொல்ல வேண்டும்!

Posted by - January 12, 2017

நல்லாட்சியைக் காப்பாற்றுவதே நமது கடமை என்று தமிழ் அரசியல் தலைமை நினைக்குமாயின் அதன் விளைவு மிகுந்த ஏமாற்றமாகவே இருக்கும்.

மகசீன் சிறைச்சாலை செல்வதற்கான அனுமதியை வீரவங்ச கோரியுள்ளார்

Posted by - January 12, 2017

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹிந்தவுடன் முதல் பேரணியை ஆரம்பிக்கும் கட்சி!

Posted by - January 12, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பங்குப்பற்றுதலுடன் புதிதாக அமைக்கப்பட்ட “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன” கட்சியின் முதல் பேரணி இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணத்தில் சாட்சியாளராக மாறும் மைத்திரி! -பொலன்னறுவை தீவிர பாதுகாப்பு

Posted by - January 12, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது சொந்த தொகுதியான பொலன்னறுவைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தமை முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்- ரணில்

Posted by - January 12, 2017

ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தமை முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் உரிமை உள்ளிட்ட விடயங்களைப் பாதுகாத்து இலங்கையில் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பின் மூலமே, இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை, வழங்க ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது குறித்து பிரதமர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெற்றியாகும்- ஜனாதிபதி செயலகம்

Posted by - January 12, 2017

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் ஆக்கபூர்வமான நிலைமாற்றத்தை கௌரவிக்கும் வகையில், ஐரோப்பிய ஆணைக்குழு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி, நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்த முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இந்த வரிச்சலுகை வலுவான சக்தியாக அமையும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம், இதுவரை தெற்கிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவில்லை- பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - January 12, 2017

நல்லிணக்க செயலணியினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தமிழர்களுக்கான உரிமைகள் குறித்த விடயங்கள் தெளிவூட்டப்பட்டுள்ள போதிலும், அந்த அறிக்கையில் சிங்கள மக்கள் தொடர்பில் எந்தவித விடயங்களும்  தெளிவூட்டப்படவில்லை என ஜாதிக்க ஹெல உறுமயவின் பிரதம செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதன்படி, தமிழர்களுக்கு அனைத்து விதத்திலும் பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம், இதுவரை தெற்கிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தென் பகுதியில் தமிழர்கள்

முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு பெரும் சிரமம்

Posted by - January 12, 2017

முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் குடிநீர் விநியோகத்திற்காக அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படாது செயலிழந்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமங்களில்  ஒன்றாகக் காணப்படும் ஆரோக்கியபுரம் பகுதியில் வசித்தவரும் குடும்பங்களுக்கான குடிநீர் பிரசினையை தீர்ப்பதற்காக அப்பகுதியில் நீர்த்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டது. அப்பகுதியில் நிலவுகின்ற குடிநீர்த் தேவை