மிருககாட்சி சாலையில் புலி தாக்கி ஒருவர் பலி – (காணொளி இணைப்பு)

Posted by - January 30, 2017

கிழக்கு சீனாவில் நன்போ நகரில் அமைந்துள்ள மிருககாட்சி சாலைக்கு அனுமதி சீட்டு இன்றி பாதுகாப்பு சுவர் வழியாக நுழை முற்பட்ட நபரொருவர் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரின் மனைவியும், குழந்தையும் அனுமதி சீட்டுக்களை பெற்று மிருககாட்சி சாலைக்கு சென்றுள்ளனர். எனினும் இவர் அனுமதி சீட்டு இன்றி உள்நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது புலியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அந்த

ராஜிவ் கொலைக்கு முன்னரே அறிக்கை

Posted by - January 30, 2017

கடந்த 1991ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னதாகவே, சி.ஐ.ஏ. என அழைக்கப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவினால் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டால் அல்லது அவர் அரசியலில் இருந்து திடீர் என அகற்றப்பட்டால் அதனால் இந்தியாவில் ஏற்படும் விளைவுகள் குறித்து அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 23 பக்கங்களைக் கொண்டு சொல்லப்பட்ட அறிக்கை கடந்த 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரேஷ்ட சி.ஐ.ஏ. அதிகாரிகளின்

பாகிஸ்தானியர்களுக்கு டிரம்ப் தடை விதிக்க வேண்டும் – இம்ரான் கான்

Posted by - January 30, 2017

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு பாகிஸ்தானியர்களுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதிப்பார் என நம்புவதாக கிரிக்கட் வீரரும், தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக சிரியா, ஈரான் உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தற்காலிக தடை விதித்தார். டிரம்பின் இந்த நடவடிக்கை உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவித்தன.

90 வயது முதியவர், தனது 31வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு, மகளை சிறைப்பிடித்து வைத்துள்ளார்.

Posted by - January 30, 2017

சவுதியை சேர்ந்த 90 வயது முதியவர், தனது 31வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு, மகளை சிறைப்பிடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஷபானா சுல்தானா. இவர், சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, அந்நாட்டிலேயே குடியிருந்து வருகிறார். சவுதி குடியுரிமையும் பெற்றுள்ள ஷபானா சுல்தானாவுக்கு, சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான், தனது கணவர் ஒரு பாலியல் வெறிபிடித்த நபர் என்பது தெரியவந்தது. ஷபானாவுக்கு முன்பாகவே, 30 இளம்பெண்களை திருமணம்

அரசாங்கத்தின் மீது ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - January 30, 2017

தற்போதைய அரசாங்கம் மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பான மோசடிக்கு உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதில்லையென ஜே. வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார் மத்திய வங்கி முறி தொடர்பில் விசாரணை குழு நியமிக்கப்பட்டபோதும் அதனால் முழுமையான விசாரணைகள் நடத்த முடியும் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது. அந்த திருட்டை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை கொடுக்க முடியாவிட்டால், தற்போதைய ஆட்சியாளர்கள் இருந்து பயனில்லை. அர்ஜூன்

மகிந்த ஆட்சியில் மட்டுமல்ல, தற்போதைய ஆட்சியில் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை – அஜித்

Posted by - January 30, 2017

மகிந்த ஆட்சியில் மட்டுமல்லாது, தற்போதைய ஆட்சியில் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கத்தின் வேகம் குறைவாக உள்ளது. கைது செய்யப்பட்ட ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படுவதில்லை என பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதனை தாம் ஏற்று கொள்வதாகவும் தெரிவித்த அவர், கடந்த அரசாங்கம்

எல்லை மீள் நிர்ணய அறிக்கை விரைவில் வர்த்தமானியில் – உயர் நீதிமன்றத்தில் அறிவிப்பு

Posted by - January 30, 2017

எல்லை மீள் நிர்ணய அறிக்கையை ஒரு மாத காலப்பகுதியினுள் வர்த்தமானி மூலம் பிரசுரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா சார்பில் உயர் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி இன்று இதனை அறிவித்துள்ளார். எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தலை உடனடியாக நடத்துமாறு பெப்ரல் அமைப்பு உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனு இன்று மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதிகளாக

மிக் கொள்வனவு விசாரணை – முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களது உண்மை முகம் தெரியவரும்

Posted by - January 30, 2017

மிக் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களது தேசப்பற்று குறித்த உண்மைத் தன்மை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்பார்த்த ஏராளமான விடயங்கள் கிடைக்காது போயுள்ளன. ஊழல்கள் இடம்பெற்றுள்ள போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது சட்டத்துக்கு அமைவாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதன்படி மிக் விமான கொள்வனவு குறித்த விசாரணையும் தற்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில், முன்னாள் பாதுகாப்பு

முப்படையினருக்கு சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி

Posted by - January 30, 2017

தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினருக்கு தேவையான சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக மேற்கொள்ளக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கால அவகாசம் கோருகிறார் பிரதமர்

Posted by - January 30, 2017

வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு இளையோருக்கு தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க தமக்கு 3 ஆண்டுகால அவகாசம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த காலத்தில் ஆட்சி புரிந்தவர்கள் மக்கள் வழங்கிய ஆணைக் கொண்டு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. தற்போது தங்களுக்கு 3 ஆண்டு கால அவகாசம் வழங்கினால், பல்வேறு முதலீடுகளைக் கொண்டு இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.