உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றமடைய வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 31, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் முறை விரைவாக மாற்றமடைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இந்த தேர்தல் முறையினால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் சிறிய கட்சிகளே எனக் கூறிய அவர், இந்த விடயம் குறித்து எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் அவதானத்திற்கு கொண்டு வர தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைச் சார்ந்த சிறிய அரசியல் கட்சிகள் புதிய

வாடகைக் காரில் வந்து ஏமாற்றிய போலி உத்தியோகத்தர்

Posted by - December 31, 2017

மோட்டார் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு தனியார் நிறுவன அதிகாரி போல் நடித்து பணம் பிடுங்க முயன்ற ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று (30) கைது செய்தனர் கண்டியில், தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து வாடகைக்கு மோட்டார் வாகனம் ஒன்றை பெற்றுள்ள மேற்படி சந்தேக நபர் கண்டி ஹுலுகங்கை பிரதேசத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, தான் கண்டியின் பிரபல நிதி நிறுவனப் பிரதிநிதி என்றும் தாம் குறைந்த விலையில் முச்சக்கர வண்டிகளை பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில்

வீதி விபத்துக்களைத் தடுக்க ‘டம்மி’ பொலிஸ்

Posted by - December 31, 2017

இலங்கையில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த இலங்கை பொலிஸார் புதிய வழிமுறை ஒன்றைத் திட்டமிட்டுள்ளனர். வீதி ஓரத்தில் பொலிஸாரைப் போன்ற பொம்மைகளைக் காட்சிக்கு வைப்பதன் மூலம், வாகனத்தில் அதி வேகமாக வருபவர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே அந்தத் திட்டம்! தூரத்தில் இருந்து பார்த்தால் உண்மையான பொலிஸ் அதிகாரி போலவே தோற்றமளிக்கும் இந்த பொம்மையை முக்கிய சந்திகள், சிறு நகரங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படக் கூடிய இடங்களில் நிறுவுவதன் மூலம் விபத்துக்கள் தடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு கூறுகிறது. இந்தப்

ஜெ.ஆர், சந்திரிக்கா, மஹிந்த பாவித்த கார்களை ஆழ் கடலில் மூழ்கடிக்க தீர்மானம்

Posted by - December 31, 2017

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு கருதிக், கடந்த 40 வருடங்களுள் நாட்டின் ஜனாதிபதிகளின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட குண்டுதுளைக்காத 25 மோட்டார் வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Mercedes Benz மற்றும் Jaguar வகை விலையுயர்ந்த இந்த மோட்டார் வாகனங்களில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மானுக்குக் கொண்டுவரப்பட்ட Toyota Land வாகனமும் உள்ளடங்குகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான ஜெ.ஆர். ஜெயவர்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் குறித்த வாகனங்கள் பாவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனங்களை ஆழ்

ஜெரூசலத்தைப் பேசும் பௌத்த தலைமைகள் நாட்டின் வரலாற்று அழிவுகளை காண்பதில்லை-இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ

Posted by - December 31, 2017

ஜெரூசலம் பற்றிப் பேசுகின்ற இந்நாட்டு பௌத்த தலைமைகள், நாட்டில் அழிக்கப்படும் பௌத்த சின்னங்களைப் பற்றிப் பேசுவதில்லையென ராவணா பலய அமைப்பு அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினதும் அமைச்சர் மனோ கணேசனினதும் நல்லிணக்க செயற்பாடுகளினால் சிங்களவர்களும், பௌத்தர்களும் மட்டுமே பாதிக்கப்படுவதாக அவ்வமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலை, சாம்புர் பிரதேசத்தில் வரலாற்றுச் சின்னங்கள் உடைத்தொழிக்கப்பட்டமைக்கு பொது மக்களே கைது செய்யப்பட்டனர். இவர்களின் பின்னாலுள்ள அரசியல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தேரர் பகிரங்க அறிவிப்புச் செய்துள்ளார்.

கட்சியைப் பாதுகாக்கவே கூட்டரசாங்கம் அமைத்தோம்- நிமல் சிறிபால

Posted by - December 31, 2017

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் அக்கட்சியிலுள்ள சகல தரப்பினரதும் இணக்கத்துடனேயே கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டது எனவும், கட்சியின் பிளவுக்கு ஸ்ரீ ல.சு.க.யிலுள்ள மஹிந்த தரப்பு உறுப்பினர்களே பொறுப்புக் கூறவேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீ ல.சு.க.யின் தோல்விக்கும் ஐ.தே.க.யின் வெற்றிக்கும் சில ஸ்ரீ ல.சு.கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கூறியுள்ளார். நாட்டின் நலனுக்காகவும், தேசிய நன்மை கருதியுமே இருபெரும் கட்சிகளும் கட்சியின் கொள்கை

UNP-SLFP உடன்படிக்கை இன்றுடன் நிறைவு, மீண்டும் தொடர்ந்தால் வெட்கக் கேடு- டளஸ்

Posted by - December 31, 2017

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த காலம் இன்று 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஜனவரி 1 ஆம் திகதியின் பின்னர் இந்த சம்பந்தத்தை தொடர்வதாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் மகுட வாசகமாக “திருடர்களுடன் நிர்வாணிகள்” என மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐ.தே.கட்சியுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு

கோரிக்கை நிறைவேற்றாவிடின்,வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறா- தொழிற்சங்கம்

Posted by - December 31, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் தபால் திணைக்களத்தை மூடிய முறைமையிலான திணைக்களமாக உத்தியோகபுர்வமாக அறிவித்து, அதற்கு தேவையான நிருவாக கட்டமைப்பை ஒழுங்கு செய்யாவிடின் தபால் மூல வாக்குகளை ஏற்றுக் கொள்வது மற்றும் வாக்காளர் அட்டைகளை விநியோகித்தல் என்பன முழுமையாக நிறுத்தப்படும் என தபால் தொழிற்சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர். அரசாங்கம் தொடர்ந்தும் தம்மை ஏமாற்ற நடவடிக்கை எடுத்தால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றில் குதிப்பதை தவிர வேறு வழியில்லையென கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார

வேட்பாளர்களைப் பாதுகாத்துக் கொள்வதே மஹிந்த குழுவுக்கு சவால்- துமிந்த

Posted by - December 31, 2017

பொதுஜன பெரமுனவினால் தமக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை சேர்த்துக் கொள்வது எப்படிப் போனாலும், பட்டியலில் பெயரிட்ட வேட்பாளர்கள் வெளியே செல்வதை தடுக்க முடியாதுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன தலைமையில் வேட்பாளராக பெயரிடப்பட்ட பலர் அடுத்துவரும் நாட்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரையில் பொதுஜன பெரமுன கட்சியிலிருந்த வேட்பாளர்களாக பெயரிட்ட 10 பேர் ஸ்ரீ ல.சு.க.யுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீரோடைக்கு அருகில் சடலம்

Posted by - December 31, 2017

எல்லே, நாவலகம என்ற பகுதியில் உள்ள நீரோடைக்கு அருகிலிருந்து உருக்குலைந்த நிலையில்  ஆணொருவரின் சடலத்தை எல்லே பொலிஸார் இன்று (31)  மீட்டுள்ளனர். சடலமொன்று கிடப்பதாக எல்லே பொலிசாருக்கு தகவல் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் சட்டைப் பைக்குள் கிடந்த அடையாள அட்டையின் பிரகாரம் அந்தச் சடலம் நாவலகம பகுதியைச் சேர்ந்த ஜே.எம்.பிரேமசிறி (52)  என அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக தற்போது அந்தச் சடலம் பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில்    வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.