கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்று ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். கேப்பாப்புலவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான போராட்டம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகப்பீட மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் குழு இன்று நேரில் அங்கு சென்று அறிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்களை அவர்களின் சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றக்கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம். இதேவேளை நல்லாட்சி அரசாங்கம் இம்மக்களின் நியாயமான போராட்டத்தினை ஏற்று குறித்த மக்களை அப்பிரதேசத்தில் மீள்குடியேற்றி

