மகிந்தராஜபக்ச நாட்டை தீயிட்டு எரிக்கும்அனுமானாக மாறியுள்ளார்!

Posted by - February 9, 2017

சுதந்திரதினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கைஒன்றை வெளியிட்டு 70வது சுதந்திர தினத்தைகொண்டாட நாடு இருக்குமா என்பதுபிரச்சினைக்குரியது என கூறியிருப்பதை வன்மையாககண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சிதெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு கூற வேண்டும்.

Posted by - February 9, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 25 கோடி ரூபாவை இழப்பீடு கோரும் நாமல்!

Posted by - February 9, 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 25 கோடி ரூபாவை இழப்பீடாக கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் நடித்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு

Posted by - February 9, 2017

உள்ளுராட்சி மன்ற தேர்தலை இலக்காக கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நடித்து கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை பொது ஜன முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அந்த முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜீ எல் பீரிஸ் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

நான் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர். இது தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகின்றார்-ஞா.ஸ்ரீநேசன்

Posted by - February 9, 2017

கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் நாடாளுமன்றில் உரையாற்றும் போது கிழக்கு மாகாண சபை மற்றும் வடமாகாண சபை பற்றி வாக்குவாதம் இடம்பெற்றது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கான இரகசியம்

Posted by - February 9, 2017

2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின் இரகசிய பேச்சுவார்த்தை முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் சிங்கபூர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை

Posted by - February 9, 2017

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது நீதிமன்ற உத்தரவை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், லஹிரு வீரசேகர கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில்…(காணொளி)

Posted by - February 9, 2017

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதத்துடன், இராணுவத்தின் ஜீப் வண்டி மோதியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 10.00 மணியளவில் அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரியாலைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவசிப்பாய்கள் சென்ற வாகனமே இவ்வாறு

மலையக தோட்டப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன…(காணொளி)

Posted by - February 9, 2017

மலையக தோட்டப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது கிராமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார். நுவரெலியா மாவட்டத்தில் அக்கரபத்தனை ஊட்டுவில் தோட்டத்தில் 150 தனித்தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 71 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அதனை இன்று ஜனாதிபதி திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தார். மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் எண்ணக்கருவிற்கு அமைய, லயன் வீடுகளுக்கு மாற்றாக இந்த புதிய பெருந்தோட்ட கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண தனியார் பேரூந்துகளும் சேவை புறக்கணிப்பில்

Posted by - February 9, 2017

வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் சகல தனியார் பேரூந்துகளும் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண இதனை தெரிவித்தார். வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிறுத்தும் நிலையம் தொடர்பில் அண்மையில் தனியார் மற்றும் அரச பேரூந்து உரிமையாளர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்த வந்த தனியார் பேரூந்து உரிமையாளர்கள் இன்றைய தினம், மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சேவை