மைத்திரி சிறிசேனா வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த ஐநா நோக்கி அணிதிரள்வோம் வாரீர் : தாய்த் தமிழகத்தில் இருந்து சு. ப. உதயகுமார்

Posted by - February 9, 2017

எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக் காலப்பகுதியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 06 .03 .2017 அன்று புலம்பெயர் தமிழ்த் தேசிய மக்களால் ஜெனிவாவில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 9, 2017

யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதி பிரதேசத்தில் பொலிஸார் பல்கலைகழக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொலை செய்த வழக்கு விசாரனையின் சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்.பல்கலைகழகத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் மீது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அண்மையில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்திருந்தனர். இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை

Posted by - February 9, 2017

தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். குடியரசு தலைவர், பிரதமர், மற்றும் உள்துறை அமைச்சகம் என்பவற்றிட்கு இவ்வாறு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்ச் செல்வம் மற்றும் சசிக்கலா ஆகியேருடன் இடம்பெற்ற சந்திப்புகள் குறித்த விபரத்தை ஆளுநர் அறிவித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில்

பன்னீர் செல்வத்துக்கு ஆதரவா?: சுப்புலட்சுமி கருத்துக்கு ஸ்டாலின் மறுப்பு

Posted by - February 9, 2017

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் பன்னீர் செல்வம் தலைமையிலான அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பு லட்சுமி, ”பன்னீர் செல்வத்திற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி, எவ்வித பிரதிபலனும் இன்றி திமுக ஆதரவு அளிக்கும். இது தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை சட்டசபையில் துரைமுருகன் தெளிவுபடுத்தி உள்ளார். தளபதியும் தெளிவுபடுத்தி இருக்கிறார்” என்று கூறியிருந்தார். இதனையடுத்து சத்தியமங்கலத்தில் காலையில் தான்

எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் சசிகலா

Posted by - February 9, 2017

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை அதிமுக பொதுச் செயலாளர் சசிகாலா நேரில் சந்தித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அவர் உடன் சென்றனர். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சசிகலா வழங்கினார். மேலும் தமிழத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆளுநரிடம் உரிமை கோரினார். முன்னதாக ஆளுநர் மாளிகை வருவதற்கு முன்பாக மெரினாவில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின்

ஆளுநரை சந்திக்கும் முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் சசிகலா

Posted by - February 9, 2017

அதிமுக அவைத் தலைவர் மது சூதனன் தலைமையில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமது ஆதரவாளர்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை மாலை 5 மணியளவில் சந்தித்தார். இதனையடுத்து, இரவு 7.30 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா 10 எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநரை சந்தித்தார். இதனிடையே, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கும் முன்பு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று சசிகலா அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் தொட்டு கும்பிட்டு மலர்கள் அள்ளி தூவினார். ஆட்சி அமைக்க கோரும்

ஆளுநர் சந்திப்புக்கு பின் அதிமுக நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை

Posted by - February 9, 2017

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தமது ஆதரவாளர்களுடன் மாலை 5 மணியளில் சந்தித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நிலவி வரும் சூழல் குறித்து விளக்கினர். ஆளுநரை சந்தித்த பின்னர் தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், “நல்லதே நடக்கும் என்றும் தர்மம் உறுதியாக வெல்லும் என்றும் கூறினார். இதனையடுத்து, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில்

சசிகலா குடும்பமே கட்சியை நடத்துகிறது – மதுசூதனன் ஆவேசம்

Posted by - February 9, 2017

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தனர். பின்னர், பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதிமுக தொண்டர்களையும் பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் சந்தித்தனர். அப்போது, அவைத் தலைவர் மதுசூதனன்சசிகலாவை நான் தான் ஆதரித்தேன். சசிகலா கட்சியை நடத்துவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் குடும்பமே கட்சியை நடத்துகிறது. பொருளாளராக இருந்த பன்னீர் செல்வத்துக்கு சில அவமானங்கள் இழைக்கப்பட்டதாக

A/L 2017 பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

Posted by - February 9, 2017

க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு 2017 ஆம் ஆண்டில் தோற்றவுள்ள மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியுள்ளது. விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி கால எல்லை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியாகும். அதனடிப்படையில், பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் அதிபரின் ஊடாக குறித்த தினத்திற்கு அல்லது அதற்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதேபோல் , தனியார் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்களும் , குறித்த விண்ணப்பதாரிகளால் இம்மாதம் 15ம் திகதிக்கு முன்பாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெறும்

9 மாவட்டங்களுக்கு டெங்கு அபாயம்

Posted by - February 9, 2017

9 மாவட்டங்களில் அதிகப்படியான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு , கம்பஹா , களுத்துறை , யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு , கல்முனை , காலி , மாத்தறை மற்றும் இரத்தினபுரி போன்ற மாவட்டங்கள் அதில் அடங்குகின்றன. வருடத்தில் இதுவரை 9 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் , அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் , கடந்த தினங்களில் கொழும்பு மாவட்டத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 102