சமுர்த்தியின் ஊடாக பசுமை பூங்கா என்ற திட்டத்தின் கீழ் ஒரு தொகை மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கை

Posted by - December 27, 2017

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு சமுர்த்தியின் ஊடாக பசுமை பூங்கா என்ற திட்டத்தின கீழ் ஒரு தொகை மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வீ.வரதராஜன் தெரிவித்தார். சூழல் பாதுகாப்பு மற்றும் வனவளத்தை பாதுகாக்கும் நோக்குடன் இத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெட்டவெளியாக காணப்படும் இடங்களை மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் பசுமையான இடமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நேக்கமாகும். இதற்கமைய இனங்காணப்பட்ட பிரதேசங்களில் சுமார் 1500க்கும்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும்.!

Posted by - December 27, 2017

இம்முறை நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2017) பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்தனர். மேலும், 77 ஆயிரத்து 284 தனியார் பரீட்சார்த்திகளும் உயர்தரப் பரீட்சைக்குத்

கச்சத்தீவில் அந்தோணியார் திரு விழா : தமிழக பங்குதந்தைகளுக்கு அழைப்பு!

Posted by - December 27, 2017

எதிர் வரும் பெப்ரவரி மாதம்  23 மற்றும் 24 திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறவுள்ளது.அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு  இந்திய பக்தர்களின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்து தர தமிழகத்திலுள்ள பங்குதந்தைகளுக்கு யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உணவு பாது­காப்பில் இலங்­கைக்கு முத­லிடம்

Posted by - December 27, 2017

தெற்­கா­சி­யாவில் உணவு பாது­காப்பு தொடர்பில் இலங்கை முத­லிடம் பெற்­றுள்­ள­தாக உல­க­ளா­விய உணவு பாது­காப்பு குறி­யீடு 2017 அண்­மையில் தெரி­வித்­துள்­ளது. உல­க­ளா­விய நாடு­களில் உணவு பாது­காப்பு தொடர்பில் இலங்கை 66 ஆவது இடத்தை வகிக்­கி­றது. 80 ஆவது இடத்தை பங்­க­ளா­தேஷும் நேபா­ளமும் பெற்­றுள்­ளன. மியன்மார் இதில் 81 ஆவது இடத்தைப் பெற்­றுள்­ளது. அதே வேளை பா­கிஸ்தான் 77 ஆவது இடத்­தையும் பெற்­றுள்­ளது. உல­க­ளா­விய உணவு பாது­காப்பு குறி­யீடு ஐக்­கிய நாடுகள் சபையால் வெளியி­டப்­ப­டு­கின்­றது. இதில் 113 நாடுகள் பங்­கு­பற்­றின என்­பது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் – இதுவரை 31 முறைப்பாடுகள்

Posted by - December 27, 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுடன் சம்பந்தப்பட்ட சட்டவிரோத செயல்கள் தொடர்பாக இதுவரை 31 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. பிரச்சார பதாதைகளை வாகனங்களில் ஒட்டிச்செல்லல், ஒலிபெருக்கிகளை இணைத்து வாகனங்களை கொண்டு செல்லல், தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டுதல் உள்ளிட்ட செயல்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளுக்கு சேதம் விளைவித்தல், வீடுகளுக்கு கல் எரிந்து சேதம் விளைவித்தல், தாக்குதல் நடத்தி காயத்திற்கு உட்படுத்தல், கொலை அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட செயல்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. அயகம, மினுவாங்கொடை, கண்டி, நவகமுவ

வடக்கில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் – யாழில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - December 27, 2017

யாழ்ப்பாணத்தில் பரவும் ஒருவித காய்ச்சல் 8 வயது சிறுவன் ஒருவன் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உடுப்பிடி பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 23ம் திகதி மாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான். கடந்த மூன்று மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேரும் யாழில் 11 பேரும் உரிய முறையில் அடையாளம் காணப்படாத ஒருவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து ஆராய கொழும்பில்

10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - December 27, 2017

கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் 10 கிலோ கேரளா கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து முல்லைதீவு நோக்கி குறித்த போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயற்சித்த வேளையில் நேற்று மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படியினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினர் மூலம் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஜனவரி முதல் சந்தையில் பொலிதீன் பேக் தட்டுப்பாடு- உற்பத்தியாளர்கள் சங்கம்

Posted by - December 27, 2017

பொலிதீன் மற்றும் லன்ச் சீர் என்பவற்றுக்கு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை அமுல்படுத்த இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில்  அச்சங்கத்திடம் இத்தடை குறித்து வினவியபோதே இவ்வாறு கூறியுள்ளது. அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது, புதிய வகை பொலிதீன் பைகளை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய நான்கு, ஐந்து மடங்கு நிதி மேலதிகமாக தேவைப்படுகின்றது.

நாடு பூராகவும் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - December 27, 2017

நாடு பூராகவும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு நோயிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் பணிப்பின் பேரில் கல்வி அமைச்சினால் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி 2018ம் வருடத்திற்கான முதலாவது பாடசாலை வாரம் ஆரம்பிக்கப்பட முன்னர் இம்மாதம் 30, 31ம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தில் அனைத்து பாடசாலைகளையும் டெங்கு

பிராந்திய ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட குழு

Posted by - December 27, 2017

பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக​ விசேட குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை வழங்கினார். அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் தொழில் ஆணையாளர் நாயகம் ஆகியோரைக்கொண்ட இக்குழு மூன்று மாதக் காலப்பகுதியில் இது தொடர்பான அதன் அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற