இலங்கை முழுவது பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு; 3769 பேர் கைது!

Posted by - November 25, 2017

நாடு முழுவதும் நேற்றிரவு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 3769 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை இந்த விஷேட நடவடிக்கையின் போது 5807 பேருக்கு எதிராக போக்குவரத்து விதி மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனாவில் ரூபாயை சாப்பிட கொடுத்தவரின் கைவிரலை கடித்து தின்ற புலி

Posted by - November 25, 2017

சீனாவில் ரூபாயை சாப்பிட கொடுத்தவரின் 2 விரல்களை புலி கடித்து தின்று விட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியாவில் அழகிப் போட்டி நடந்த கடற்கரை ஓட்டலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு

Posted by - November 25, 2017

ஜார்ஜியாவின் கருங்கடல் கடற்கரையில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தன.

எகிப்து: மசூதி தாக்குதலுக்கு பதிலடி – தீவிரவாதிகள் முகாம்கள் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்

Posted by - November 25, 2017

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் முகாம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவு

Posted by - November 25, 2017

துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லண்டன்: சுரங்க ரெயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

Posted by - November 25, 2017

மத்திய லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு சுரங்க ரெயில் நிலையத்தில் துப்பாக்கிச்சுடும் சப்தம் கேட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் வானிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்: எஸ்.பாலச்சந்திரன் பங்கேற்பு

Posted by - November 25, 2017

ஜப்பான் நாட்டில் வானிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கலந்துகொள்கிறார்.

சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதி மறுப்பு!

Posted by - November 25, 2017

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த சேகர் ரெட்டி மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து வேறு ஒரு நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - November 25, 2017

கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறேன். எங்கள் இறுதி இலக்கு அது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.