ஜார்ஜியாவில் அழகிப் போட்டி நடந்த கடற்கரை ஓட்டலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு

498 16

ஜார்ஜியாவின் கருங்கடல் கடற்கரையில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தன.

ஜார்ஜியா நாட்டின் கருங்கடல் கடற்கரை நகரமான பதுமியில் ஏராளமான சுற்றுலா ஓட்டல்கள் உள்ளன.

நேற்று நள்ளிரவில் இங்குள்ள லியோகிராண்ட் ஓட்டலின் ஒரு தளத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவெனப் பரவியதால் ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். மற்ற தளத்தில் தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

இருப்பிலும் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டதால் புகையை சுவாசித்த பலர் மயக்கமடைந்து விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

விபத்தில் தீக்காயம் அடைந்தும் புகையை சுவாசித்தும் பாதிக்கப்பட்ட 11 பேர் பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த ஓட்டலில்தான், ஞாயிற்றுக்கிழமை மிஸ் ஜார்ஜியா அழகிப் போட்டி நடைபெற்றது. அவர்களில் யாரும் ஓட்டலில் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜார்ஜியா அதிபர் ஜியார்ஜி மார்க்வெலாஷ்விலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a comment