திருத்திய வர்த்தமானி இன்று வரும்!

Posted by - November 27, 2017

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, இன்று திங்கட்கிழமை வெளியிடுவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.  

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக மீண்டும் பழனி திகாம்பரம் தெரிவு!

Posted by - November 27, 2017

தொழிலாளர் தேசிய சங்கத்தின் 15 ஆவது பேராளர் மாநாடு இன்று (26) ஹட்டன் DKW கலாச்சார மண்டபத்தில் நடைப்பெற்றது. 

வளர்ப்பு பிள்ளைகளாக வெளிநாடு கொண்டு செல்லப்பட்டவர்கள் பெற்றோரை தேடி வருகிறார்கள்!

Posted by - November 27, 2017

இலங்கையிலிருந்து 1980களில் வளர்ப்பு பிள்ளைகளாக வெளிநாடு கொண்டு செல்லப்பட்டவர்கள், தங்களுடைய உண்மையான பெற்றோரை கண்டறிவதற்காக உயிரியல் தரவு உள்ளடங்கிய மரபணு (DNA) வங்கியொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. இலங்கை குடும்ப திட்டம் (Sri lanka Family Project ) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் நோக்கம் 1980களில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 4000 பிள்ளைகளையும் அவர்களின் உண்மையான பெற்றோரையும் சந்திக்க வைப்பதாகும். குறிப்பாக

பதவிகள் குறித்து கவனம் செலுத்தவில்லை! – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - November 27, 2017

சிறி லங்கா சுதந்திர கட்சியுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களின் போது பதவிகள் குறித்து கவனம் செலுத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிரியா: ரஷ்ய படையினரின் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பலி

Posted by - November 27, 2017

சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மீது ரஷ்ய விமானங்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 34 பேர் பலியாகினர்.

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராக தலைவர் பிரபாகரன் மட்டுமே இருந்தார்!

Posted by - November 27, 2017

பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் குறித்த அவரது அக்கறையும் ஒன்று. உலக சூழல்தினத்துக்காகத் தங்கள் மாணவர் தினத்தையே மாற்றி அமைத்தவர் அவர். நான் அறிந்த ஆயுதப் போராட்டத் தலைமைகளில் சுற்றுச்சூழல் மீது இப்படி அக்கறை கொண்ட ஒரு தலைவராகப் பிரபாகரன் மட்டுமே இருந்தார் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை

இந்தோனேசியா: பாலி தீவில் 50 ஆண்டுக்கு பிறகு வெடித்த எரிமலை

Posted by - November 27, 2017

இந்தோனேசியாவின் பாலி தீவில் 50 ஆண்டுக்கு பிறகு வெடித்த ஆகங் எரிமலையால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் சக்திவாய்ந்த வெடி விபத்தில் இருவர் பலி

Posted by - November 27, 2017

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தில் நேற்று(26) நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடி விபத்தில் இருவர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.

ஆர்.கே.நகர் தேர்தலை கண்காணிக்க 9 பார்வையாளர்கள் 4-ந்தேதி வருகை

Posted by - November 27, 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழுவை டெல்லி தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ள நிலையில், டிசம்பவர் 4-ந்தேதி அந்த குழு சென்னை வர உள்ளது.

சென்னையில் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

Posted by - November 27, 2017

சென்னையில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்த நாளையையொட்டி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொண்டாடினார்.