மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தோல்வி: மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - December 5, 2017

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இறுதி முடிவு எடுக்க இன்று கூடு­கி­றது கூட்­ட­மைப்பு!

Posted by - December 5, 2017

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன்று கூட­வுள்­ளது.

யாழில் வாள்வெட்டு இரு இளைஞர்கள் படுகாயம்

Posted by - December 5, 2017

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் இளைஞர் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனகபுரம் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டது!

Posted by - December 5, 2017

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள தாமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உத்தரவுக்கு அமையவே கரச்சிப் பிரதேச சபையினால் தாரவியல் பூங்கா எனும் பெயர்ப்பலகை அங்கு நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் நிறுவனத்திற்கு பதிலான மாற்று நிறுவனம்! அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Posted by - December 5, 2017

சைட்டம் நிறுவனத்திற்கு பதிலான வேறு மாற்று நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைதுகள் தொடர்பில் ஆராய இலங்கை வந்த ஐ.நா.குழுவினர்!

Posted by - December 5, 2017

தன்னிச்சையாக கைது செய்யப்படுவது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று சிறப்பு நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர்.

8 மாவட்டங்களிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடுவோம்! மணிவண்ணன்

Posted by - December 4, 2017

தமிழ்தேசிய மக்கள் முன்னணியானது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 8 மாவட்டங்களிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடும் என அதன் பேச்சாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

மரங்களை தறித்து வர்த்தகம் செய்த மூவர் கைது!

Posted by - December 4, 2017

மன்னார் பூமலந்தான் வனப்பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் மரங்களை தறித்து வர்த்தகம் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களால் மரம் தறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலட்சக்கணக்கில் பணத்தினை மோசடி செய்த நபர் சிக்கினார்!

Posted by - December 4, 2017

வாடகைக்கு கார்களை வழங்குவதாக கூறி இலட்சக்கணக்கில் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். யாழ்ப்பணத்தில் விழாக்களுக்கு கார்களை வாடகைக்கு வழங்குவதாக பத்திரிகைகளில் விளம்பரங்களை போட்டு பலரிடம் இலட்சக்கணக்கான பணத்தினை மோசடி செய்துள்ளார் என பாதிக்கப்பப்ட்டவர்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.அதனை தொடர்ந்து மோசடி நபரை கைது செய்துள்ளனர்

பாம் எண்ணெய்யை தேங்காய் எண்ணெய்யாக மாற்றும் மோசடி!

Posted by - December 4, 2017

கலேவெல – எனமமல்பொத – ஏழாம் தூண் பிரதேசத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பாம் எண்ணெயை தேங்காய் எண்ணெய்யாக மாற்றும் மோசடியொன்றை காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினர் இன்று சுற்றிவளைத்தனர். இதன்போது , ஒன்றாக கலக்கப்பட்டிருந்த 25ஆயிரம் லீற்றர் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வௌி பிரதேசங்களில் இருந்து குறித்த பகுதிக்கு பாம் எண்ணெய் கொண்டுவரப்பட்டு அது தேங்காய் எண்ணெய்யுடன் கலக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலக்கப்பட்ட 5 ஆயிரம் லீற்றர் தேங்காய்