பாகிஸ்தான்: படகு கவிழ்ந்து விபத்து – பண்டிகையை கொண்டாட சென்ற 21 பேர் பலி

Posted by - December 8, 2017

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பண்டிகையை கொண்டாட சென்ற 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஜெர்மனி: ஆட்சியமைப்பது தொடர்பாக ஏஞ்சலா மெர்க்கல் உடன் பேச எதிர்க்கட்சி சம்மதம்

Posted by - December 8, 2017

ஜெர்மனியில் ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியுடன் கூட்டணி அமைக்க முக்கிய எதிர்க்கட்சியான எஸ்.பி.டி சம்மதம் தெரிவித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி செல்ல வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - December 8, 2017

புயல் சேதத்தை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி செல்ல வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியுள்ளார்.

இன்று யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா!

Posted by - December 8, 2017

யாழ்.பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி இன்று(8) காலை 9 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சகஜமாக உரையாடிய மைத்திரி – மஹிந்த

Posted by - December 8, 2017

நிதி இரா­ஜாங்க அமைச்சர் ல­க் ஷ்மன் யாப்பா அபே­வர்த்­த­னவின் மகன் பசந்த யாப்பா அபே­வர்­த்த­னவின் திரு­மணம் நேற்று மாத்­த­றையில் நடை­பெற்ற நிலையில் அதில்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் கலந்­து­கொண்­டி­ருந்­தமை விசேட அம்­ச­மா­க­வி­ருந்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மாப்­பிள்­ளையின் சார்பில் சாட்­சிக்­கை­யெ­ழுத்­திட்­ட­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மணப்­பெண்ணின் சார்பில் திரு­ம­ணப்­ப­திவில் கைச்­சாத்­திட்­டி­ருந்தார். இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் அருகில் அமர்ந்­த­வாறு அள­வ­ள­வா­கிக்­கொண்­டி­ருந்­தனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன

தீவிரமாகும் ரயில்வே வேலை நிறுத்தம்; வேறு சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் குதிக்க ஏற்பாடு

Posted by - December 8, 2017

ரயில்வே சாரதிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று (7)  அதிகாலை ஆரம்பித்த வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், சம்பள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் ரயில்வே திணைக்களத்தின் வேறு சில தொழிற்சங்கங்களும் இன்று (8) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளன. புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் ரயில்வே காவலர்கள் சங்கம் என்பனவே வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளன. இன்று மட்டும் சுமார் 200 புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதால் பெருமளவான பயணிகள்

மும்முனை போட்டி களத்தில் கொழும்பு மாநகர சபை : ஐ.தே.க.வில் ரோஸி, சு.க.வில் அசாத் சாலி

Posted by - December 8, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசிய கட்சியை தவிர ஏனைய கட்சிகள் யாரை நியமிப்பதென்பதில் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுவருவ தாக தெரியவருகின்றது. இதுவரை காலமும் தேர்தலில் இருமுனை போட்டியே இருந்து வந்தது. ஆனால் இம்முறை மும்முனை போட்டி  நிலவுவதால்   போட்டித்தன்மை அதிகரித்துள்ளது. கொழும்பு மாநகரசபையை பொறுத்த வரை கடந்த 50 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவான கட்சியே ஆட்சி செய்து வந்துள்ளன.

மின்சாரம் தாக்கி இளம் தந்தை பலி

Posted by - December 8, 2017

அம்பலாந்தோட்டை, புலுல்யாய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளைக்குத் தந்தையான இளைஞர் ஒருவர் பலியானார். தச்சுத் தொழிலாளியான இவர், வேலையில் ஈடுபட்டிருந்தபோது உபகரணத்தில் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். உபகரணம் மீது சாய்ந்த நிலையில் அவரைக் கண்ட அவரது சகோதரி, அவரை எழுப்ப முயற்சித்துள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. அப்போதுதான் தனது சகோதரர் மீது மின்சாரம் பாய்ந்துகொண்டிருப்பதை உணர்ந்து கூக்குரலிட்டார். அதைக் கேட்ட அயலவர்கள் ஓடிவந்து மின் இணைப்பைத் துண்டித்தனர். எனினும் அதற்கிடையில் தச்சுத் தொழிலாளி

டிசம்பர் 31 க்கு முன்னதாக கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படும்-சுவாமிநாதன்

Posted by - December 8, 2017

டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சபையில் தெரிவித்ததோடு இரணைதீவு விவகாரம் தொடர்பில் படையினருடன் பேச்சுநடத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி, நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட தெரிவுக்குழு அறிக்கைகள் மீதான

நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

Posted by - December 8, 2017

சியம்பலாண்டுவ நீதிமன்ற வளாகத்தில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட கைதிகள் இருவரும் அழைக்கப்படும் வரை காத்திருக்க வைக்கப்பட்டிருந்தன. அப்போது, பொலிஸார் அசந்திருந்த நேரம் பார்த்து கைதிகள் இருவரும் தப்பியோடியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் பொலிஸார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.