கவிரதன்

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டோர் கைது

Posted by - November 5, 2017
கூரிய ஆயுதங்களை காண்பித்தும் பொதுமக்களை காயப்படுத்தியும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐவர் அத்துருகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் தடுப்பு விசாரணை உத்தரவிற்கமைய காவல்துறையினரால் அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில்…
மேலும்

மக்களுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கும் அரசாங்கம்

Posted by - November 5, 2017
சிறு பிரிவினரின் பிரசாரங்களுக்கு மத்தியில் அதிகமானோருக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை நிறுத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்காக உள்ள நவீன தொழில்நுட்பத்தை பிழையாக பயன்படுத்தும் சிலர் இன்று…
மேலும்

சுனாமி-  முன்னெச்சரிக்கை

Posted by - November 5, 2017
இன்றைய தினம் நாடு முழுவதிலும் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பலி இதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள கரையோர பிரதேசங்களில் இந்த முன்னெச்சரிக்கை தெளிவூட்டல் செயற்பாடு…
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் – டிசம்பர் முதல் சீனா நிறுவனத்திடம்

Posted by - November 4, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் சீனா நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது. இந்த துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை அண்மையில் சீன நிறுவனம் ஒன்றுடன் செய்து கொள்ளப்பட்டது. இதற்கமைய குறித்த நிறுவனம் சீனாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் பொறுப்பளிக்கப்படவுள்ளதாக…
மேலும்

தவறிழைக்கின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - November 4, 2017
வெளிப்படைத் தன்மையுடன்கூடிய அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எலஹர பக்கமூன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். பெருந்தொகை நிதி ஒதுக்கீட்டில் நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு…
மேலும்

வித்தியா படுகொலை – மேலும் சிலர் கைது

Posted by - November 4, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக, காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவான்…
மேலும்

10 மாதங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் டெங்கு தொற்றாளர்கள்

Posted by - November 4, 2017
இந்த வருடத்தின் 10 மாத கால பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 517 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளமை…
மேலும்

காஸ்மீர் பகுதியில் 80 தீவிரவாதிகள் கொலை

Posted by - November 4, 2017
இந்தியாவின் தெற்கு காஸ்மீர் பகுதியில் கடந்த 6 மாதங்களில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஸ்மீரில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் இரகசிய தேடுதல் பணிகளிலும் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.…
மேலும்

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம்

Posted by - November 4, 2017
எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தை இன்றைக்குள் நூற்றுக்கு 80 வீதம் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். களஞ்சியசாலைகளில் போதுமானளவு எரிபொருள் கையிறுப்பு…
மேலும்

தேங்காய்களை சேமித்து வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை

Posted by - November 4, 2017
சந்தைக்கு தேங்காய்களை விற்காமல் சேமித்து வைத்திருக்கும் பெரிய அளவிலான வர்த்தகர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெங்கு தொடர்பிலான வாரியம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த வாரியத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்