நிலையவள்

வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டம் அதிகரிப்பு- எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதுமுள்ள பஸ் சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - November 17, 2016
வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படுகின்ற தண்டப் பணத்தின் அளவு அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பில் தற்போது நாடு பூராகவும் உள்ள பல பஸ்கள் இணைந்து கொண்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.…
மேலும்

சாரதி அனுமதிப் பத்திரத்தை தவற விட்ட பொலிஸார்

Posted by - November 17, 2016
யாழ்ப்பாணம் நகரப் போக்குவரத்துப் பொலிஸார் பிரிவில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காத பெண் ஒருவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் காணாமல் போயுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. தெல்லிப்பளை மடத்தடியைச் சேர்ந்த நவனிதா கிருபாகரன் என்பவரின் வாகன…
மேலும்

உயிரிழந்த முன்னாள் போராளி குடும்பத்தினiர் காதர் மஸ்தான் சந்தித்தார்

Posted by - November 17, 2016
மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் முன்னாள் போராளியான தே.கமலதாசின் குடும்பத்தினரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார். இதன்படி, உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கான வாழ்வாதார உதவிகள் தொடர்பில் தான் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடல்களை நடாத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.…
மேலும்

யாழ் மாநகரசபையில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வீதி ஒழுங்குகள் தொடர்பான விளக்கவுரை

Posted by - November 17, 2016
யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வீதி ஒழுங்குகள் தொடர்பான விளக்கவுரை ஒன்று, இன்று யாழ்ப்பாண மாநகரசபையில் நடாத்தப்பட்டுள்ளது. சாரதிகள் வீதிகளை குறியீடுகளின் படி விபத்துக்கள் ஏற்படடாதவாறு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சும் மோட்டார் போக்குவரத்து…
மேலும்

கிழக்கு மாகாணத்தில் புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சை(காணொளி)

Posted by - November 17, 2016
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக புற்றுநோயாளர்களுக்கான சத்திர சிகிச்சை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோயாளர் வைத்தியசாலையில், புற்றுநோயாளர்களுக்கான சத்திர சிகிச்சை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சத்திர சிகிச்சை கூடத்தின் மூலம் இன்று தொடக்கம்…
மேலும்

சுமனரத்ன தேரருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கிராம சேவை உத்தியோகத்தரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு பிரச்சினையொன்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர்…
மேலும்

யாழ் மாதகலில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - November 17, 2016
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரை இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சுமார் 75 இலட்ச ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கஞ்சா கடத்தல் ஒன்று…
மேலும்

சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-த.தே.கூட்டமைப்பு

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. மட்டக்களப்பில் சுமனரத்ன தேரரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனத்துவேசச் செயல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசியக்…
மேலும்

ஜனநாயகத்தை குறுகிய அரசியல் தேவைக்குப் பயன்படுத்த வேண்டாம்-ஜனாதிபதி

Posted by - November 17, 2016
ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காகவோ இனவாத அல்லது மதவாத அடிப்படையிலோ பயன்படுத்துவது நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தடையாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின்…
மேலும்

கிளிநொச்சி அக்கராயனில் முதிரை மரக்குற்றிகள் மீட்பு(காணொளி)

Posted by - November 17, 2016
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மணியங்குளம் பகுதியில் சட்ட விரோதமாக வெட்டப்பட்டு பாரவூர்தியில் கொண்டு செல்லப்பட்ட 43 முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் சட்டவிரோதமாகக் கடத்திச்செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன், பாரவூர்தியைச் செலுத்திச் சென்ற  அதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  
மேலும்