யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வீதி ஒழுங்குகள் தொடர்பான விளக்கவுரை ஒன்று, இன்று யாழ்ப்பாண மாநகரசபையில் நடாத்தப்பட்டுள்ளது.
சாரதிகள் வீதிகளை குறியீடுகளின் படி விபத்துக்கள் ஏற்படடாதவாறு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சும் மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் இணைந்து வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கேற்ப வீதிக் குறியீடுகளை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக ஆட்டோ சங்க சாரதிகளுக்கான விளக்கவுரையை நடாத்தியுள்ளனர்.
விளக்கவுரையை ஓய்வுபெற்ற மோட்டார் திணைக்கள அதிகாரி வல்லிபுரதநாதன் பத்மநாதன் வழங்கியுள்ளார்.

 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            