நிலையவள்

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் மரதன் ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது(காணொளி)

Posted by - January 13, 2017
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வாக ஆண் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டம் இன்று காலை கல்லூரி அதிபர் ரீ.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் நிகழ்வினை பழைய மாணவர் சங்கத்தின்…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி காரணமாக சுமார் 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு- அனர்த்த முகாமைத்துவ நிலையம் (காணொளி)

Posted by - January 13, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி காரணமாக சுமார் 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை தொடர்பில் ஆராயும் வகையில் விசேட மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. ஜனாதிபதி…
மேலும்

கிளிநொச்சியில் டெங்கு நோய் வேகமாகப் பரவிவருகின்றது- சுகாதார பிரிவு(காணொளி)

Posted by - January 13, 2017
கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருவதாகவும், கடந்த 1ஆம் திகதியில் இருந்து 13ஆம் திகதி வரை சுமார் 28 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி மாவட்ட சுகாதார பிரிவினர்,…
மேலும்

யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன(காணொளி)

Posted by - January 13, 2017
பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரப்பகுதியில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன. உழவர் திருநாளான தைப்பொங்கல் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் யாழ்ப்பாண நகர் மற்றும் நகரை அண்டிய சந்தைப்பகுதிகளில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.…
மேலும்

கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் (காணொளி)

Posted by - January 13, 2017
கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றின் ஆளுகைக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான…
மேலும்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள் தைப்பொங்கல் நிகழ்வுகளில் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது (காணொளி)

Posted by - January 13, 2017
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தைப்பொங்கல் நிகழ்வுகளில் கடந்த காலங்களை விட இவ்வருடம் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக விவசாயிகளின் வாழ்வாதார தொழிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளைய…
மேலும்

ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் மக்கள் கவலை(காணொளி)

Posted by - January 13, 2017
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மன்னாகண்டல் வெளிவயல்குளம் பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் பெருமளவான நெற்பயிர்களை அழித்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மன்னாகண்டல் வெளிவயல்…
மேலும்

முல்லைத்தீவில் இருபதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளன (காணொளி)

Posted by - January 13, 2017
முல்லைத்தீவில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளதுடன் எஞ்சிய பயிர்செய்கைகளைப் பாதுகாப்பதற்கு விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக பெருமளவான பயிர்செய்கைகள்…
மேலும்

பிரதேச சபைகள் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த காணிகளை பொறுப்பேற்க வேண்டும்- ஐங்கரநேசன்  (காணொளி)

Posted by - January 13, 2017
மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த காணிகளை பிரதேச சபைகள் பொறுப்பேற்க வேண்டும் என வடக்கு மாகாண பதில் முதலமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் உள்ளுராட்சி சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள்…
மேலும்

சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிசாருக்கும் மீண்டும் விளக்கமறியில் (காணொளி)

Posted by - January 13, 2017
சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிசாரும் இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரையும் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவானால் இம்மாதம் 27ஆம் திகதி…
மேலும்