நிலையவள்

வட்டுவாகல் பகுதியிலும் காணியை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தில் குதிப்பு

Posted by - April 19, 2017
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இலங்கை கடற்ப்படை சுபீகரித்து கோத்தபாய கடற்படை முகாம் அமைத்து தங்கியுள்ள தமது 617 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரி குறித்த பகுதி  மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று காலை  முன்னெடுத்துள்ளனர். .பல்வேறு போராட்டங்கள் நடாத்தியும் இந்த…
மேலும்

காணியில் கால் பாதிக்காது எமது போராட்டம் முடியாது கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் ஐம்பதாவது நாளை எட்டியது

Posted by - April 19, 2017
கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு மக்கள் போராட்டம் இன்று ஐம்பதாவது  நாளாக தொடர்கிறது 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரி பங்குனி மாதம்  1 ம் திகதி ஆரம்பித்த…
மேலும்

சூடான காலநிலை அடுத்த மாதம் முதல் வாரம் வரை தொடரும்

Posted by - April 19, 2017
நாட்டில் தற்பொழுது காணப்படும் சூடான காலநிலை அடுத்த மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எமது நாட்டுக்கு சூரியன் உச்சம் கொடுத்திருப்பதும், மாலை நேரத்தில் பெய்வதற்கிருந்த மழை பெய்யாமல் இருப்பதும், மழை மேகங்கள் உயர்ந்திருப்பதும், காற்று குறைந்து…
மேலும்

அரச முஸ்லிம் பாடசாலைகளின் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்

Posted by - April 19, 2017
அரச முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை கடந்த ஏப்றல் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. இதேவேளை, இன்று(19) ஆரம்பமாகும் முஸ்லிம் அரச பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள்…
மேலும்

GSP+ வரிச் சலு­கை தொடர்­பான முக்­கி­ய­மான கூட்­டத்­தொடர் இன்று

Posted by - April 19, 2017
ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ.எஸ்.பி வரிச் சலு­கையை இலங்கை மீண்டும் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பான முக்­கி­ய­மான கூட்­டத்­தொடர் இன்று பெல்­ஜியம் பிரசெல்ஸ் நகரில் ஆரம்­ப­மா­கின்­றது. இதன் போது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உயர் மட்ட குழுவின் மதிப்­பீட்டு அறிக்கை பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.…
மேலும்

ரணில் விக்ரமசிங்க மீதொடமுல்லை விஜயம்

Posted by - April 19, 2017
 ரணில் விக்ரமசிங்க இன்று மீதொடமுல்லைக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை கண்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் வீடுகளை வழங்குவோம் என இதன்போது  ரணில்   தெரிவித்துள்ளார். வியட்நாம் விஜயம் செய்திருந்த ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பிய நிலையிலேயே இங்கு விஜயம்…
மேலும்

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பிரதேச செயலக ஊழியர்கள் போராட்டம்

Posted by - April 19, 2017
கொடிகாமம் ஜே-322 கிராம சேவையாளரை தாக்கிய சந்தேக நபர்களை கைது செய்யக்கோரி சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை 10:30 மணிக்கு ஆரம்பமான போராட்டத்தில் பிரதேச செயலர் தென்மராட்சி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார…
மேலும்

பயாகல – மலேகொட பிரதேசத்தில் வீடு ஒன்றில் தீ பரவல்

Posted by - April 19, 2017
பயாகல – மலேகொட பிரதேசத்தில் வீடு ஒன்றில் நேற்று இரவு தீ பரவியுள்ளது. களுத்துறை நகர சபையின் தீயணைப்பு பிரிவு பிரதேச மக்கள் இணைந்து தீயை அணைத்துள்ளதாக பயாகல காவற்துறை தெரிவித்தது. மின் கசிவே தீ பரவலுக்கு காரணம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
மேலும்

13 லட்சம் பெறுமதியான சிகரெட் தொகையுடன் சீன நாட்டு பெண் ஒருவர் கைது

Posted by - April 19, 2017
சட்டவிரோதமான முறையில் உள்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 13 லட்சம் பெறுமதியான சிகரெட் தொகையுடன் சீன நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை டுபாய் நாட்டில் இருந்து குறித்த சிகரெட் தொகை கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலே குறித்த பெண் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில்…
மேலும்

கொழும்பு குப்பைகளை கொட்டுவதற்கு வெயாங்கொடையிலும் எதிர்ப்பு

Posted by - April 19, 2017
கொழும்பிலுள்ள குப்பைகளை தமது பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெயாங்கொடை – கலகெடியேன பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் ஒரு மருங்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்