நிலையவள்

நுரைச்சோலை மக்களின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வு

Posted by - April 28, 2017
வட மேல் மாகாணத்தில் உள்ள நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில், பிரதேசத்தில் வாழும் சமூகங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை மின்சாரத் துறையின் தொழினுட்ப, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குபடுத்துனரான இலங்கை பொதுப் பயன்பாடுகள்…
மேலும்

புதிய அரசியலமைப்பை பல்வேறு காரணங்களை காட்டி தாமதமாக்குவதாக குற்றச்சாட்டு

Posted by - April 28, 2017
புதிய அரசியலமைப்பை , பல்வேறு காரணங்களை காட்டி தாமதமாக்குவதை காணக்கூடியதாக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி கட்சியின் நிறுவனர் எஸ்.ஜே.என் செல்வநாயகம் அவர்களின் 40 வது வருட நினைவேந்தல்…
மேலும்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று 28-04-2017 முதல் பணி பகிஸ்கரிப்பில்

Posted by - April 28, 2017
கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின்  நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். செயலாளர் சாதி பெயர்களை குறிப்பிட்டு  தகாத வார்த்தைகளை பேசி அவமானப் படுத்தி வருவாதகவும் தொடர்ந்தும் பழிவாங்கும் நோக்கோடு நடந்துகொள்வதாகவும் பழிவாங்கும் நோக்கோடு பணியாளர் ஒருவரை  பணியில் இருந்து  நிறுத்தியுள்ளார் என்றும்.…
மேலும்

பல தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளன

Posted by - April 28, 2017
எதிர்வரும் மாதம் முதல் வாரப்பகுதியில் தினமொன்றில் பல தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டமொன்றினை மேற்கொள்ளப்போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அது, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராகவாகும். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சுகாதார…
மேலும்

இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

Posted by - April 28, 2017
இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உட்கட்டுமான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கோபால் பக்லால் குறிப்பிட்டார். இந்தியாவிற்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில்…
மேலும்

ஏற்றுமதியை விடுத்து இந்நாட்டில் அபிவிருத்தியை எதிர்ப்பார்க்க முடியாது

Posted by - April 28, 2017
ஏற்றுமதியை விடுத்து இந்நாட்டில் அபிவிருத்தியை எதிர்ப்பார்க்க முடியாது என வௌிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி  சில்வா தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு எதிரான பிரேரணை ஐரோப்பிய பாராளுமன்றில் நேற்று 317 வாக்குகளால் தோல்விடைந்தது. குறித்த சந்தர்ப்பத்தின்…
மேலும்

52 ஆவது நாளாக வீதியோரத்தில் தொடரும் மக்கள் அவலம்

Posted by - April 28, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 52  ஆவது நாளாக இந்த வீதி ஓரத்தில் போராடிவருகின்றனர். ஆனால் இந்த அரசாங்கமானது எமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் இன்றும் போராட்டம்…
மேலும்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக் கூட்டம் தலவாக்கலையில்

Posted by - April 28, 2017
தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முறை மே தினக் கூட்டம் தலவாக்கலை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதனடிப்படையில் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் , அமைச்சர் பீ திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில்…
மேலும்

பட்டாசு தொழிற்சாலையொன்றில் வெடிப்பு! ஒருவர் காயம்

Posted by - April 28, 2017
கடான – கிம்புலாபிடிய – தாகொன்ன பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று மதியம் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் நீர்க்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. வெடிப்பினை தொடர்ந்து குறித்த பகுதியில்…
மேலும்

வவுனியாவில் 64 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

Posted by - April 28, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 64 ஆவது நாளாகவும் இன்று (28) தொடர்கிறது. குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும்…
மேலும்