நிலையவள்

அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் !

Posted by - May 28, 2017
அமைச்சரவையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசின் முதலாவது அமைச்சரவை மாற்றம் அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில், சகோதர மொழி ஊடகம் ஒன்றிற்கு அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

நான் நினைத்தால் ஒரு மணித்தியாலத்தில் கலவரத்தை ஏற்படுத்த முடியும் – ஞானசார தேரர்

Posted by - May 28, 2017
ஒரு மணித்தியாலத்தில் இந்த நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அது எனக்குத் தேவை என்றால் மாத்திரமே. என்றாலும் கலவரம், மோதல் மற்றும் இரத்தத்தைச் சிந்தி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என பொதுபல சேனாவின் பொதுச்…
மேலும்

8 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

Posted by - May 28, 2017
எதிர்வரும் பல மணித்தியாலங்களுக்குள் 8 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார். இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே இந்த மண்சரிவு ஆபத்து நிலவுகின்றது.…
மேலும்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்

Posted by - May 28, 2017
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, சுமார் ஒரு லட்சத்து ஐம்பாதாயிரம் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் உறுதியளித்துள்ளதாகவும்…
மேலும்

பிறந்து ஒரு நாளேயான சிசு வீதி ஓரத்தில் மீட்பு

Posted by - May 28, 2017
பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று, வீதி ஓரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் நேற்று (27.05.2017) மாலை மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஏறாவூர் சர்வோதய வீதியில் சிசுவொன்று வீசப்பட்டுக் கிடப்பதைக் கண்ட அவ்வீதியை அண்டி வாழும் மக்கள், சிசுவை…
மேலும்

உந்துருளியொன்று பேருந்தில் மோதி விபத்து ;ஒருவர் பலி

Posted by - May 28, 2017
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் உந்துருளியொன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி இன்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்துள்ளவர் மெத்தபொல – கிரிஉல்ல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. விபத்து இடம்பெறும்…
மேலும்

இந்தியாவின் இரண்டாவது நிவாரண கப்பலும் இலங்கை வந்தடைந்தது

Posted by - May 28, 2017
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியாவினால் வழங்கப்படும் நிவாரணங்களுடன் கூடிய இரண்டாவது கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பலில் உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட…
மேலும்

சீரற்ற காலநிலை ; 4 இலட்சம் பேர் இடம்பெயர்வு, 120 பேர் பலி

Posted by - May 27, 2017
சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரை இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93ஆயிரத்து 455ஆக அதிகரித்துள்ளது. 185 நலன்புரி முகாம்கள் இவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று மாலை…
மேலும்

தெற்கு அதிவேக வீதியின் இரு நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன

Posted by - May 27, 2017
கடவத்த முதல் மாத்தறை வரையான தெற்கு அதிவேக வீதியின் கடுவலெ மற்றும் பியகம நுழைவாயில்களிலிருந்து வாகனங்கள் வெளியேறுவது இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கொட்டாவ, அத்துருகிரிய ஆகிய மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.…
மேலும்

சிங்கள, பௌத்த இனவாதம் தலைதூக்கியுள்ளதாம் – மங்கள

Posted by - May 27, 2017
சிங்கள பௌத்த வாதத்தை அடிப்படையாக் கொண்டு நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்கியுள்ளதாக புதிய நிதியமைச்சரும், ஊடககத்துறை அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக தெற்கில் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மற்றும் மத ஸ்தலங்கள் மீது சிங்கள பேரினவாதிகளால் தொடர்ச்சியாக…
மேலும்