நிலையவள்

துறைமுக ஊழியர்கள் சவப்பெட்டியை எரித்து ஆர்ப்பாட்டம்

Posted by - July 29, 2017
அரசாங்கம் இன்று சீனாவுடன் செய்து கொண்ட  ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சவப்பெட்டியை எரித்து கொழும்பு துறைமுக ஊழியர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை துறைமுக உரிமையை 99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

புதிய வெளியுறவுச் செயலாளர் நியமனம்

Posted by - July 29, 2017
அமெரிக்காவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக பணியாற்றிய பிரசாத் காரியவசம்  புதிய வௌியுறவுச் செயலாளராக ஜனாதிபதியினால் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் வௌியுறவு செயலாளர் எசல வீரக்கோன் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.
மேலும்

வடக்கில் வறட்சியால் பல லட்சம் பேர் பாதிப்பு!

Posted by - July 29, 2017
வறட்சி காரணமாக வடக்கில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 678 குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 62 ஆயிரத்து 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட வறட்சி பாதிப்பு தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிலவும் வறட்சியான காலநிலையால்…
மேலும்

அதிக சீன முதலீட்டாளர்களை எதிர்பார்த்துள்ள இலங்கை- ரவி

Posted by - July 29, 2017
இலங்கை மேலும் அதிக சீன முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சீன செய்தி ஸ்தாபனமான ஸின் ஹுஹாவுக்கு இந்தக் கருத்தினை அவர் தெரிவித்துள்ளார். ஆரம்ப காலம் முதல், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே மிக உறுதியான உறவு இருந்ததாக…
மேலும்

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது

Posted by - July 29, 2017
அனுமதிப்பத்திரம் இல்லாமல் மதுபான போத்தல்களுடன் சிற்றூர்ந்தில் பயணித்த வெளிநாட்டு நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிற்றூர்ந்தில் இருந்து பல்வேறு வகையான மதுபான போத்தல்கள் 66 கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…
மேலும்

ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் அன்பழகன் முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியக்கருவித் தொகுதி அன்பளிப்பு

Posted by - July 29, 2017
ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் அன்பழகன் முன்பள்ளிக்கு மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன்(பவன்) பாண்ட் வாத்தியக்கருவித் தொகுதி அன்பளிப்பு. முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னச்சாளம்பன் கிராமத்தில் அமைந்துள்ள அன்பழகன் முன்பள்ளியில் பயிலும் மாணவச் சிறார்களின் பயிற்சிக்கும், பயன்பாட்டிற்குமாக, பாண்ட் வாத்தியக் கருவிகளின்…
மேலும்

பொருத்தமற்றவர்கள் அந்தந்த பதவிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும்-டிலான் பெரேரா

Posted by - July 29, 2017
ஜனாதிபதியினால் தமது அதிகாரத்தை பயன்படுத்தி குறித்த சில துறைகளில் உள்ள தகுதியற்றவர்களை அகற்றிவிட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையான நாட்டிற்கும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் எதிர்காலத்திற்கும் அனுகூலங்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளை…
மேலும்

காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம்

Posted by - July 29, 2017
காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக சர்வதேசத்தின் ஆதரவுடன் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர்கள் குறித்து…
மேலும்

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - July 29, 2017
யாழ்.மாதகல் மேற்கை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் மாதகல் மேற்கை சேர்ந்த நிறஞ்சன் சாளினி என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக இளவாளை…
மேலும்

ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டம்

Posted by - July 29, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக சைட்டம் எதிர் மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் உறுப்பினரும் முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளருமான இதனை தெரிவித்தார். நாட்டில் உள்ள…
மேலும்