மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக சைட்டம் எதிர் மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் உறுப்பினரும் முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளருமான இதனை தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ஒன்றிணைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படும்.
இதற்கமைய அன்றைய தினம் அனைத்து நகரப்பகுதிகளிலும் சைட்டத்திற்கு எதிரான இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் புபுது ஜயகொட சுட்டிக்காட்டினார்.

