நிலையவள்

யாழில் உள்ள கொன்சியூலர் அலுவலகத்தின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை -பொது மக்கள்

Posted by - June 30, 2017
யாழ் மாவட்டச்செயலகத்தில் அமைந்துள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தால் வடக்கு மக்களுக்கு திருப்தியான சேவைகள் வழக்கப்படுவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முதலாவது பிராந்திய கொன்சியூலர் அலுவலகம், அப்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த ஜனவரி மாதம்…
மேலும்

சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ள FCID

Posted by - June 30, 2017
சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை கைது செய்ய நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு சர்வதேச பொலிஸாரின் (இன்டபோல்) ஒத்துழைப்பை நாடியுள்ளது. மிக் விமான கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பாரிய நிதி் மோசடி தொடர்பாக நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப்…
மேலும்

அரசாங்கத்தின் தீர்மானத்தில் திருப்தியில்லை, தொடர்ந்தும் போராட்டம்

Posted by - June 30, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் காத்திரமான தீர்மானமொன்றை முன்வைக்காததன் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதென தீர்மானித்துள்ளது. இந்த போராட்டத்துக்கு அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் பல ஒத்துழைப்பு வழங்குவதாக…
மேலும்

உமாஓயா திட்டம்: மஹிந்தவின் குற்றச்சாட்டு

Posted by - June 30, 2017
உமாஓயா திட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், உமாஓயா திட்டத்தை எமது அரசுதான் ஆரம்பித்தது.…
மேலும்

மீன்கள் இறக்குமதி செய்வதைக் குறைத்து சர்வதேச சந்தைக்கு மீன்களை ஏற்றுமதி செய்யவேண்டும்

Posted by - June 30, 2017
2020 ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து மீன்கள் இறக்குமதி செய்வதைக் குறைத்து சர்வதேச சந்தைக்கு மீன்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 142 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் மட்டக்களப்பு தர்மபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள செட்டை…
மேலும்

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 516 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை

Posted by - June 30, 2017
கடந்த மாதம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 516 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் செய்திக்குறிப்பொன்றை…
மேலும்

தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சித்து வரும் வீ.ஆனந்தசங்கரி

Posted by - June 30, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு முறையாக செயற்பட்டிருந்தால், தற்போது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று…
மேலும்

புகையிரத மிதி பலகையில் இருந்து கீழே விழுந்து மாணவர் ஒருவர் பலி

Posted by - June 30, 2017
புகையிரத மிதி பலகையில் இருந்து கீழே விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் கிராண்பாஸ் – துடுகல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து வெயாங்கொட நோக்கி பயணித்த புகையிரதத்தில் மிதி பலகையில் பயணம்…
மேலும்

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் யாழில்

Posted by - June 30, 2017
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தமர தொடர்பாக பொதுமக களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவருகிறது. யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க  மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணிகள் கலந்து…
மேலும்

பிலியந்தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மேலும் 2 இருவர் கைது

Posted by - June 30, 2017
பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் மேலும் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஸ்பேவ மற்றும் பிலியந்தலை பிரதேசங்களில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித கொலையை மேற்கொள்வதற்காக சதித்திட்டம்…
மேலும்