நிலையவள்

வாக்கெடுப்பு நாளை காலை 10.30 மணிக்கு ஆரம்பம்

Posted by - August 24, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்துக்கு நாளை (25) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (24) தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பு நாளை காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்…
மேலும்

நீதிமன்ற உத்தரவின் பேரில் 8 கைக்குண்டுகள் செயலிழப்பு

Posted by - August 24, 2017
வவுனியா – மூன்று முறிப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டுகள் 8 ம் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காவற்துறை விசேட அதிரடிப் படையினர் செயலிழக்க செய்துள்ளனர். கைவிடப்பட்டிருந்த காணியொன்றில் இருந்து இந்த கைக்குண்டுகள் கண்டிபிடிக்கப்பட்டிருந்தன. இவைகள் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்டவை…
மேலும்

சுண்ணாகம் இளைஞர் மரணம் – கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - August 24, 2017
சுண்ணாகம் காவற்துறையால் கைது செய்யப்பட்ட போது நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுண்ணாகம் காவல்துறையில் சேவை புரிந்து வந்த காவற்துறை உத்தியோகஸ்தர்கள் 6 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது…
மேலும்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்

Posted by - August 24, 2017
நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமானதாக தீர்மானித்துள்ளது
மேலும்

சுன்னாகத்தில் தொடரூந்தில் மோதி இளைஞன் பலி!

Posted by - August 24, 2017
காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம்  யாழ் சுன்னாகம் புகையிரத நிலையத்தை  அண்மித்து  சென்றுகொண்டிருந்த பொழுது  புகையிரதப் பாதையில் நின்ற இளைஞன் ஒருவருடன் மோதுண்டதில்  குறித்த இளைஞனின்  தலை துண்டிக்கப்பட்டு  சம்பவ இடத்திலையே  உயிரிழந்துள்ளான் இருப்பினும் சம்பவத்தில் பலியானார்…
மேலும்

கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகர் இயற்கை எய்தினார்

Posted by - August 24, 2017
கிளிநொச்சி ஜெந்திநகர்  மகாதேவ ஆச்சிரம முதாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது  குருபீடாதிபதியும் ஆன ஸ்ரீமத் தவத்திருகனேசாணந்த மகாதேவ சுவாமிகள் இன்று (வியாழன்) நண்பகல் மகா சமாதி எய்தி உள்ளார். கிளிநொச்சியில் உள்ள சைவ நிறுவனங்கள்…
மேலும்

இரத்தினபுரியில் உயர் தர மாணவி கொலை

Posted by - August 24, 2017
இரத்தினபுரி – ரக்குவானை – படேயாய பிரதேசத்தில் இம்முறை உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.அவரின் வீட்டினுள்ளேயே மாணவி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கொலைக்கு முன்னர் அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும்

இரு விபசார விடுதிகள் சுற்றிவளைப்பு : 8 பெண்களுட்பட 10 பேர் கைது

Posted by - August 24, 2017
ஆயுள்வேத மசாஜ் நிலையம் என்றபேரில் முன்னெடுக்கப்பட்டு வந்த இரு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொண்டதில் 8 பெண்கள் உட்பட 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்றுக்காலை பன்னிப்பிட்டிய மற்றும் களனி ஆகிய  பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு…
மேலும்

ஊடகவியளாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு

Posted by - August 24, 2017
சமயங்களினூடாக நல்லிணக்கம் கானல் என்ற தொனிப்பொருளில் தேசிய சமாதானப்பேரவை ஏற்பாடு செய்த ஊடகவியளாளர்களுக்கான பன்மைத்துவம் .உள்வாங்குதல் தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தல் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு முல்லைத்திவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்றும் இன்றும்…
மேலும்

தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்தத் தேவையும் கிடையாது – பைசர் முஸ்தபா

Posted by - August 24, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த ஒரு தேவையும் கிடையாது என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை சமர்பித்து இன்று பாராளுமன்றில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.…
மேலும்