நிலையவள்

மன்னாரில் போட்டியிட சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்று கட்டுப்பணத்தை செலுத்தியது

Posted by - December 11, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சி இன்று  மாலை 3 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியின் வடமாகாணத்திற்கான அமைப்பாளரும், வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித்…
மேலும்

வறட்சி காரணமாக 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

Posted by - December 11, 2017
நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 339,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம், குருநாகல், அநுராதபுரம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த மாவட்டங்களில்…
மேலும்

தேசிய சுதந்திர முன்னணி முக்கியஸ்தர்கள் மூவர் சுதந்திரக் கட்சியில் இணைவு

Posted by - December 11, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் பி.பீ. குமார ஆகியோர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…
மேலும்

ஆறுமுகன் தொண்டமானின் புதல்வரை கைது செய்யுமாறு உத்தரவு

Posted by - December 11, 2017
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் ஆறுமுகனை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஸ்கெலிய சாமிமலை ஓல்ட்டன் பகுதியில் மரண வீடொன்றில் வைத்து…
மேலும்

அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவத் தளபதி சந்திப்பு

Posted by - December 11, 2017
இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்லஸ் ஹேஸ் மற்றும் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று காலை இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன்…
மேலும்

தேர்தல் சட்டம் இன்று முதல் அமுல், O/L பரீட்சைக்கு இடைஞ்சல் செய்வது குற்றம்-ருவன் குணசேகர

Posted by - December 11, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள் அனைத்தும் இன்று (11) முதல் நடைமுறைக்கு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். பொலிஸ் தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன்…
மேலும்

இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Posted by - December 11, 2017
நெடுங்கேணி பளம்பாசிப்பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  நேற்று காலை குறித்தயுவதி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். பளம்பாசியினை சேர்ந்த 20 அகவையுடைய யோகானந்தராசா கம்சிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம்…
மேலும்

முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறையாக செயற்படவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - December 11, 2017
வடக்கிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் நாம் அக்கறையாக செயற்படவில்லை,இது துரதிஸ்ர வசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் எமக்கு அநீதி இழைப்பதாக தமிழர் தரப்பு தெரிவித்துக் கொண்டு எம்மை விட சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு தமிழர்கள் அநீதி…
மேலும்

காணாமல் போன இலங்கை மீனவர்கள் ஈரான் அரசின் பாதுகாப்பில்

Posted by - December 11, 2017
கடந்த சில நாட்களாக நிலவிய  சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போன  இலங்கை மீனவர்கள் ஐவர் ஈரான் அரசின் பாதுகாப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த ஐந்து மீனவர்களையும் விமானத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 29 ஆம்…
மேலும்

மஹிந்தவுடன் இருந்த மற்றுமொரு எம்.பி. மைத்திரியுடன் இணைவு

Posted by - December 11, 2017
மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டு எதிர்க் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீயானி விஜேவிக்ரம நேற்று மாலை (10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார். நேற்று (10) மாலை ஜனாதிபதியை சந்தி அவர், ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வழங்குவதாக…
மேலும்