நிலையவள்

தீர்வு இன்றேல் முன்னறிவித்தல் இன்றி வேலை நிறுத்தம் – GMOA

Posted by - January 15, 2018
தமது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் முன்னறிவித்தலின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக இன்று(15) இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அச்சங்கத்தின் அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி…
மேலும்

இந்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - January 15, 2018
சட்டம், ஒழுங்கு மற்றும் இலத்திரனியல் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இந்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தார். இந்தியாவின் பீகார் பிராந்தியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதியும் சட்டத்தரணியுமான ரவி…
மேலும்

எமது தயவால் ஜனாதிபதியாகி எமக்கே ஆப்பு வைக்க முனைகின்றனர்- மரிக்கார் சீற்றம்

Posted by - January 15, 2018
மஹிந்த ராஜபக்ஷவுடன் அப்பம் சாப்பிட்டு விட்டு அவருக்கு ஆப்பு வைத்தது போன்று எமது தயவால் ஜனாதிபதியாகி அடுத்த தேர்தலில் எமக்கே வேட்டு வைக்க இவர்கள் முனைகின்றனர் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.…
மேலும்

அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகளில் அமெ­ரிக்கா அதி­ருப்தி

Posted by - January 15, 2018
பொறுப்­புக்­கூறல்  விட­யத்­திலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதிலும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அதி­ருப்­தியையும் ஏமாற்­றத்­தையும் தரு­வ­தாக அமெ­ரிக்க தூது வர் அதுல் கேஷாப் வடக்கு  முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் தெரி­வித்­துள்ளார். மஹிந்த ராஜபக் ஷவின் கதை­களை  கூறி வாக்­கு­று­தி­களை மீறு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இதே­வேளை…
மேலும்

மஹிந்த ராஜ­பக்ஷ ஏப்­ரலில் பிர­த­ம­ராம் !

Posted by - January 15, 2018
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன அதி­க­ள­வான உள்ளூர் அதி­கார சபை­களின் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­மா­க­வி­ருந்தால் எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­திற்கு முன்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­த­ம­ராக்கிக் காட்­டு­வ­தாக கூட்டு எதிர்க்­கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டலஸ் அளகப்…
மேலும்

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதியதில் ஐவர் படுகாயம்!!!

Posted by - January 15, 2018
நுவரெலியா – உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்ஹில் தோட்டத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியாவிலிருந்து கந்தப்பளை பகுதியை நோக்கிப் பயணித்த லொறியும்,…
மேலும்

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த ரயிலில் தீ

Posted by - January 15, 2018
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் தீப் பிடித்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.இன்று முற்பகல் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த குறித்த கடுகதி ரயிலின் இயந்திரப் பெட்டியில் தீ பரவியுள்ளது. மீசாலை – சாவகச்சேரிப் பகுதியில் குறித்த ரயில்…
மேலும்

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களுடன் நிறைவு

Posted by - January 15, 2018
ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களுடன் நிறைவடைவதாக உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என கேட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்தில் விளக்கம்…
மேலும்

நாமல் உள்ளிட்ட 6 பேருக்கெதிரான வழக்கு பெப்ரவரியில்

Posted by - January 15, 2018
நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பெருக்கெதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார். மனு அறிக்கைகளை பிரதிவாதிகளுக்கு வழங்குவதற்காக…
மேலும்

குருநாகல் – குளியாப்பிட்டி வைத்தியசாலை தரமுயர்த்தப்படவுள்ளது

Posted by - January 15, 2018
குருநாகல் – குளியாப்பிட்டி தள வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளது. வயம்ப பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட இருக்கும் மருத்துவ பீடத்துடன் இணைந்ததாக குளியாப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படுகிறது. இதற்கென 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்