நிலையவள்

ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும்

Posted by - June 10, 2018
எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள  ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் என  ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின்  பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ள…
மேலும்

அமெரிக்காவுக்காக சீனாவை பகைக்க கூடாது – திஸ்ஸ விதாரண

Posted by - June 10, 2018
அமெரிக்காவின் நட்புறவினை  வளர்த்துக் கொள்ளும் நோக்கில்  சீனாவை பகைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தேசிய  அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் சூத்திரதாரியாக அமெரிக்காவே செயற்படுகின்றது என  பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், அம்பாந்தோட்டை…
மேலும்

6700 கிலோ சந்தனத்துடன் இருவர் கைது

Posted by - June 10, 2018
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக தயார் படுத்தப்பட்டிருந்த வௌ்ளை சந்தனக்கட்டைகளுடன் இருவரை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர். பன்னல, எலபடகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகளே இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து 6700 கிலோ கிராம் எடையுடைய 175…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.யில் இருந்து இன்னும் சிலர் மிக விரைவில் வெளியேறுவர்- மஹிந்த

Posted by - June 10, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மிக விரைவில் இன்னும் சிலர் வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்வீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு…
மேலும்

அரசாங்கத்துக்குள் உள்ள பிரச்சினையை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்- மஹிந்த

Posted by - June 10, 2018
எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு தனக்கு அரசாங்கத்திலுள்ள யாரையும் ஏச வேண்டிய தேவையில்லையெனவும், அவர்களே தங்களுக்குள் ஏசிக் கொள்கின்றார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொட்டாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். எமக்கு…
மேலும்

அதிகாலையில் நாடு முழுவதும் திடீர் சோதனை- பொலிஸ்

Posted by - June 10, 2018
நாடு முழுவதும் இன்று (10) அதிகாலை விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாள உலக குழுக்களின் செயற்பாட்டைத் தடுத்தல் மற்றும் குற்றச் செயல்களை மட்டுப்படுத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.…
மேலும்

கேலிக் கூத்தாக மாறியுள்ளது ஸ்ரீ ல.சு.க. – திலும் அமுனுகம

Posted by - June 10, 2018
நாட்டிலுள்ள பிரதான கட்சிகளுள் ஒன்றான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைமை இன்று கேலிக் கூத்தாக மாறியுள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஒரே கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்திலும் மற்றும் சிலர் எதிர்க் கட்சியிலும் இருக்கும் நிலைமை…
மேலும்

16 பேர் குழு புதன்கிழமை கோட்டாவுடன் பேச்சு

Posted by - June 10, 2018
தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை (13) மாலை இடம்பெறவுள்ளதாக சந்திம வீரக்கொடி…
மேலும்

மண்ணெண்ணெயின் விலை குறைப்பு

Posted by - June 10, 2018
நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார். அந்தவகையில் 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலையானது 70 ரூபாவாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும்

பிரதேச அபிவிருத்தி வங்கி கட்டிடத்தில் தீ

Posted by - June 10, 2018
கல்பிட்டி பகுதியில் உள்ள பிரதேச அபிவிருத்தி வங்கி கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (09) இரவு 7 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது உடனடியாக செயற்பட்ட பொலிஸார், இராணுவத்தினர் மற்றும்…
மேலும்