காணாமல்போனோர் தொடர்பில் சுமந்திரனிடம் கேட்கமுடியாது என நான் கூறியது . அந்தக் காலத்தில் சுமந்திரன் அரசியல் செயல்பாட்டிலேயே இருக்கவில்லை என்ற உண்மையின் அடிப்படையிலேயே என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை கண்டறியுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் தமிழரசு கட்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தின்போது சிலர் பொய்களை கூறி தவறாக சிலர் வழிநடாத்தி வருவதாகவும் அந்த பொய்களுக்கு இப்போது கூட்டமைப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிக்கியிருப்பதாகவும்
மகளிர் தினத்தை முன்னிட்டு கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் “மாற்றத்தை ஏற்க துணிவோம்” எனினும் தொனிப்பொருளில் கவனயீர்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் காலை 9.30 மணியளவில்யாழ்ப்பாணம் பிரதான வீதி பஸ்தியன் சந்தியில் இடம்பெற்றது.
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 193 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் ஒருதொகை ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சுயாதீன உறுப்பினர்களாக ஏற்க முடியாது என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் கடலோர காவல்படை நிலையத்தில் 302 மற்றும் 307 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.