உடல்நலக்குறைவு காரணமாக சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கலந்துகொள்ள முடியவில்லை என அரச வைத்தியர்கள் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
வெள்ளைச் சீனி மற்றும் புரொய்லர் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.