வடக்கு மாகாண அரச திணைக்கள நிலையங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களும் மாகாண சேவைக்குள் உள்ளீர்க்கப்படவுள்ளனர். இதுவரை மாகாண சேவைக்குள் உள்ளீர்க்கப்படாத பணியாளர்கள் உரிய படிவங்கள் மூலம் பொது சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டம் செய்வோரை கலகம் விளைவிப்போராக காண்பித்து அதனை அடக்குவதற்காக சரத் பொன்சேகாவிற்கு உயர் மட்ட இராணுவப் பதவி வழங்கப்படுமாயின் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளுடைய புனர்வாழ்வு, வாழ்வாதாரம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை, வேலைவாய்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும்.
ஜேர்மனியில் முழுவதுமாக முகத்தை மறைக்கும் பர்தா அணிய தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.உள்நாட்டு போர், தீவிரவாதம் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு