உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி, வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டாரென, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையிடம், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான அறிவியல் முறை இல்லை என்று, மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனினும், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக, தகுதிமிக்க 70 அதிகாரிகள் உள்ளனர்…
சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில அமைப்பாளர்கள் நியாயமாக கொள்கையின் அடிப்படையிலேயே கட்சித் தலைவர்களால் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.