குப்பை மீள்சுழற்சிக்கான அறிவியல் முறை இல்லை! – சம்பிக்க ரணவக்க

208 0

கொழும்பு மாநகர சபையிடம், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான அறிவியல் முறை இல்லை என்று, மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனினும், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக, தகுதிமிக்க 70 அதிகாரிகள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிவியல் முறையொன்று இன்மை உட்பட்ட பல்வேறு காரணங்களினாலேயே, மீதொட்டமுல்லையில் பேரழிவு இடம்பெற்றதாகவும் வெள்ளம் காரணமாக, சுற்றுச்சூழல் உறுதியற்ற தன்மையில் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்குள், மீதொட்டமுல்லையில் உள்ள குப்பைகளை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதன் பின்னர், அங்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சவேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

நாட்டில், அறிவியல் கழிவு மேலாண்மை நிலையங்களை அமைக்கவேண்டிய கட்டாய நிலைய உருவாகியுள்ளது என்றும் இந்த நிலையங்களை அமைப்பதற்கு, அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகின்றது என்றும் அவர் கூறினார்.