சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் இடங்களில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்க ரஷ்யா, துருக்கி, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கென நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
அன்னிய செலாவணி வழக்கின் குற்றச்சாட்டு பதிவை வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலாவிடம் விசாரிக்க எழும்பூர் பொருளாதார கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கில் கைதான ஜம்சீர் அலி, ஜிதின் ராய் இருவரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந் தேதி நடந்த காவலாளி கொலை-கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை…
அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 107 டிகிரி வெயிலின் தாக்கம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.