380 டன் பாறையில் செய்த சாமி சிலையை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வாகனத்தில் எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தி;ல் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை ஏற்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார்கள்.
மயிலிட்டித் துறைமுகம் விடுவிப்பு என்பது ஒரு அரசியல் நாடகம் எனவும், அடுத்த தேர்தலின்போது மயிலிட்டி மக்கள் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் மயிலிட்டி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டம் சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதென சுற்றுலாத் துறை அமைச்சை மேற்கோள்காட்டி சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்தம் மற்றும் இன வன்செயல்களால் சேதமடைந்த மதஸ்தளங்ளுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டு வேலைத்திட்டத்துக்கு அமைவாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் புலிதலாராமய விகாரைக்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருட இறுதிக்கு முன்னதாகவும் ´டெப்´ கணிணிப்பொறிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மின்சார பாவனைக்காக செலுத்தப்படும் கட்டணம் எந்த தருணத்திலும் அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் மீள்சுழற்சி சக்திவலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.